சர்வதேச புத்தக தினத்தை முன்னிட்டு மன்.அல்.அஸ்ஹர் தேசிய பாடசாலை......
சர்வதேச புத்தக தினத்தை முன்னிட்டு மன்/அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையில் விசேட நிகழ்வு இடம்பெற்றது.
ஒரு புத்தகம் என்பது கடந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்குமான இணைப்பு, தலைமுறைகள் மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையிலான பாலம்” என்கிறது யுனெஸ்கோ அமைப்பின் உலக புத்தக தினம் தொடர்பான இணைய பக்கம். புத்தகங்கள் ஒட்டுமொத்த மனித குலத்தை ஒரு குடும்பமாக இணைக்க உதவுகின்றன என்றும், மனித குலத்தின் லட்சியங்களை பிரதிபலிக்கும் வகையில் சேர்ந்திசை போல ஒலிக்கும் குரல்களை கொண்டாடும் நோக்கத்துடன் உலக புத்தக தினம் அமைந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் வாசிப்பு மனிதனை முழுமையடையச் செய்கின்றது. வாசிப்பதன் மூலமே சிறந்த சமூகத்தை கட்டியெழுப்ப முடியும் என்ற தொனிப்பொருளிள் இந்த நிகழ்வு சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது.
இதன்போது புத்தக பயன்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி மன்.அல்.அஸ்ஹர் தேசிய பாடசாலை......அதிபர்,ஆசிரியர்கள்.மாணவர்கள். பெற்றோர் மற்றும் பழைய மாணவர் குழு சகிதம் மன்னார் மாவட்ட செயலகம் , வலயக் கல்வி அலுவலகம். பிரதேசச் செயல்கம் நகர சபை மற்றும் மன்னார் நகரில் உள்ள பாடசாலைகளுக்கு சென்று அங்கு புத்தகத் தொகுதியினை அன்பளிப்பு செய்தனர்.
-வை- கஜேந்திரன்-
சர்வதேச புத்தக தினத்தை முன்னிட்டு மன்.அல்.அஸ்ஹர் தேசிய பாடசாலை......
Reviewed by Author
on
April 27, 2017
Rating:

No comments:
Post a Comment