மன்னார் மாவட்டத்தில் உள்ள சுகாதார பிரச்சினைகளை தீர்க்க உடனடி நடவடிக்கை-மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜீத சேனாரத்ன.(படம்)
மன்னார் மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள சுகாதார ரீதியிலான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உடனடியாக துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதோடு, தேவையான நிதி ஒதுக்கீடுகளையும் வழங்குவதாக மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜீத சேனாரத்ன தெரிவித்தார்.
-மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உள்ளக வைத்தியர் பயிலுனர் விடுதி திறக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை(2) மாலை மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி யூட் ரதனி தலைமையில் இடம் பெற்றது.
-இதன் போது குறித்த உள்ளக வைத்தியர் பயிலுனர் விடுதியை அமைச்சர் ராஜீத சேனாரத்ன,பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவர் செல்வம் அடைக்கலநாதன்,பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் மற்றும் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
அதனைத்தொடர்ந்து மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம் பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,,,
மன்னார் மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் பல்வேறு குறைபாடுகள் மற்றும் பிரச்சினைகள் உள்ளதாக நான் அறிகின்றேன்.
குறித்த பிரச்சினைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய நான் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்றேன்.
மேலும் மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற விசேட சத்திரைச்சிகிச்சை நிபுனர்களுக்கு தேவையான சத்திர சிகிச்சை உபகரணங்களை வழங்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுகின்றேன்.
மேலும் புதிதாக கொள்வனவு செய்யப்படவுள்ள அம்புலன்ஸ் வண்டிகளில் ஒரு தொகுதியினை மன்னார் மாவட்ட வைத்தியசாலைகளுக்கும் வழங்கவுள்ளேன்.என தெரிவித்தனர்.
குறித்த கலந்துரையாடலில் வைத்தியர்கள்,விசேட சத்திர சிகிச்சை நிபுனர்கள்,சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்,பிரதி சுகாதார சேவைகள் பயிப்பாளர் நாயகம்,பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாண சபை அமைச்சர்,மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
-இதன் போது வடமாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்காக நெதர்லாந்து அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 900 மில்லியன் ரூபாய் நிதி மன்னார் மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளதையும், மன்னார் மாவட்ட பொது வைவத்தியசாலையில் அமைக்கப்படவிருந்த விசேட சத்திர சிகிச்சை கூடம் அமைப்பதற்கான வேளைத்திட்டம் தடைப்பட்டுள்ளமை குறித்தும் வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜீத சேனாரத்ன அவர்களின் கலனத்திற்கு கொண்டு வந்தார்.
எனினும் மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையில் அமைக்கப்படவுள்ள விசேட சத்திர சிகிச்சை கூடம் நெதர்லாந்து அரசு வழங்கிய பணத்தில் உள்ள மிகுதி பணத்தை பயண்படுத்தி வேளைத்திட்டங்களை ஆரம்பிக்க அனுமதி வழங்குவதாகவும்,குறித்த சத்திர சிகிச்சை கூடம் முழுமை பெற தேவையான மிகுதி பணத்தை மத்திய சுகாதார அமைச்சினூடாக பெற்றுத்தர துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜீத சேனாரத்ன குறித்த கலந்துரையாடலின் போது உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்டத்தில் உள்ள சுகாதார பிரச்சினைகளை தீர்க்க உடனடி நடவடிக்கை-மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜீத சேனாரத்ன.(படம்)
Reviewed by NEWMANNAR
on
April 02, 2017
Rating:
No comments:
Post a Comment