முருங்கன் பொன்தீவு கண்டல் கிராமத்தில் இலவச கணிணி பயிற்சி ஆரம்பித்து வைப்பு.(படங்கள்)
நண்பனின் தேவை நற்பனி மன்றத்தின் ஏற்பாட்டில் முருங்கன் பொன்தீவு கண்டல் கிராமத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இலவச கணிணி பயிற்சி நெறி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
நண்பனின் தேவை நற்பனி மன்றத்தின் 16 கிராமமாக குறித்த பொன்தீவு கண்டல் கிராமம் தெரிவு செய்யப்பட்ட நிலையில் குறித்த கிராமத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு 3 மாதங்களை அடிப்படையாக கொண்ட குறித்த கணிணி பயிற்சி நெறி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நண்பனின் தேவை நற்பனி மன்றத்தின் இயக்குனர் கே.பவமொழி பவன் தலைமையில் நேற்று(16) ஞாயிற்றுக்கிழமை காலை பொன்தீவுகண்டல் ஆலய பிரதான மண்டபத்தில் ஆரம்ப நிகழ்வு இடம் பெற்றது.
இதன் போது விருந்தினர்களாக பங்குத்தந்தை லோரன்ஸ் அடிகளார் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் ஆகியோர் கலந்து கொண்டு குறித்த கணிணி பயிற்சியை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்-
(17-04-2017)
நண்பனின் தேவை நற்பனி மன்றத்தின் 16 கிராமமாக குறித்த பொன்தீவு கண்டல் கிராமம் தெரிவு செய்யப்பட்ட நிலையில் குறித்த கிராமத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு 3 மாதங்களை அடிப்படையாக கொண்ட குறித்த கணிணி பயிற்சி நெறி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நண்பனின் தேவை நற்பனி மன்றத்தின் இயக்குனர் கே.பவமொழி பவன் தலைமையில் நேற்று(16) ஞாயிற்றுக்கிழமை காலை பொன்தீவுகண்டல் ஆலய பிரதான மண்டபத்தில் ஆரம்ப நிகழ்வு இடம் பெற்றது.
இதன் போது விருந்தினர்களாக பங்குத்தந்தை லோரன்ஸ் அடிகளார் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் ஆகியோர் கலந்து கொண்டு குறித்த கணிணி பயிற்சியை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்-
(17-04-2017)
முருங்கன் பொன்தீவு கண்டல் கிராமத்தில் இலவச கணிணி பயிற்சி ஆரம்பித்து வைப்பு.(படங்கள்)
Reviewed by NEWMANNAR
on
April 17, 2017
Rating:
No comments:
Post a Comment