தட்சனா மருதமடு பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்று வரும் சித்திரைப் புத்தாண்டு நிகழ்வு.(படங்கள் )
மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட தட்சனா மருதமடு ஐக்கிய விளையாட்டுக்கழகம் மற்றும்,பாலம்பிட்டி கிராம மக்கள் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்த தமிழ்,சிங்கள சித்திரைப் புத்தாண்டு விழா இன்று சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் தட்சனா மருதமடு பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.
-முதல் நிகழ்வாக உதைப்பந்தாட்ட போட்டி ஆரம்பமாகியுள்ளது.
குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா,சிறப்பு விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன், மற்றும் விருந்தினர்களாக மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஏ.ஜெராட்,மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் பி.ஞானராஜ்,613 ஆவது பிடைப்பிரிவு பொறுப்பதிகாரி ஏ.விஜயசூரிய,பாலம்பிட்டி கிராம அலுவலகர் சோ.கேதீஸ்வரன்,மடு பொலிஸ் அதிகாரி,சர்வமதத்தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு உதைப்பந்தாட்ட போட்டியை ஆரம்பித்து வைத்துள்ளனர்.
இதன் போது குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்காணவர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்-
(15-04-2017)
-முதல் நிகழ்வாக உதைப்பந்தாட்ட போட்டி ஆரம்பமாகியுள்ளது.
குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா,சிறப்பு விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன், மற்றும் விருந்தினர்களாக மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஏ.ஜெராட்,மன்னார் மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் பி.ஞானராஜ்,613 ஆவது பிடைப்பிரிவு பொறுப்பதிகாரி ஏ.விஜயசூரிய,பாலம்பிட்டி கிராம அலுவலகர் சோ.கேதீஸ்வரன்,மடு பொலிஸ் அதிகாரி,சர்வமதத்தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டு உதைப்பந்தாட்ட போட்டியை ஆரம்பித்து வைத்துள்ளனர்.
இதன் போது குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்காணவர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்-
(15-04-2017)
தட்சனா மருதமடு பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்று வரும் சித்திரைப் புத்தாண்டு நிகழ்வு.(படங்கள் )
Reviewed by NEWMANNAR
on
April 15, 2017
Rating:

No comments:
Post a Comment