வடக்கிற்கு சமஷ்டியை பெற்றுக்கொடுக்க முயற்சிக்கும் சுவிஸ்....
இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு சமஷ்டி ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொடுக்க சுவிஸர்லாந்து கடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக சிங்கள வார பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கான சுவிஸர்லாந்து தூதுவர், வடமாகாணத்திற்கு சென்று முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுடன் சமஷ்டி முறை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள சுவிஸர்லாந்து தூதரகம் தலையிட்டு தனது நாட்டின் பல்கலைக்கழம் ஒன்றை சேர்ந்த சமஷ்டி நிர்வாகம் தொடர்பான விசேட நிபுணர்களை இலங்கைக்கு அனுப்பியிருந்தது எனவும் அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, சுவிஸர்லாந்து சமஷ்டி முறையை கொண்ட கூட்டாச்சி நாடு என்பது குறிப்பிடத்தக்கது.
வடக்கிற்கு சமஷ்டியை பெற்றுக்கொடுக்க முயற்சிக்கும் சுவிஸ்....
Reviewed by Author
on
April 09, 2017
Rating:

No comments:
Post a Comment