ஒபாமா மகளிடம் வரம்பு மீறிய நபர் என்னை திருமணம் செய்து கொள
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் மகளான மாலியாவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திய இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பராக் ஒபாமாவின் மகள் மாலியா (18), நியூயோர்கில் உள்ள Manhattan நகரில் படித்துக் கொண்டிருக்கிறார்.
சம்பவதினத்தன்று வகுப்புக்கு செல்லும் போது, அவரை பின்தொடர்ந்த Jair Nilton Cardoso (30) என்னும் இளைஞர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார்.
இதை மாலியா பெரிதாக எடுத்து கொள்ளவில்லை, பின்னர் இரண்டு நாள் கழித்து மீண்டும் மாலியாவை பின்தொடர்ந்த Jair அவரிடம் திருமண கோரிக்கையை வைத்துள்ளார்.
இதை பார்த்த மாலியாவின் பாதுகாவலர்கள் Jairஐ அதிரடியாக கைது செய்தார்கள்.
Jair-ம் நடந்த விசாரணையில், அவர் ஏற்கனவே ஒபாமா ஜனாதிபதியாக இருந்த போது வெள்ளை மாளிகையில் மாலியாவை பார்க்க முயற்சித்தது தெரியவந்துள்ளது.
Jairயிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஒபாமா மகளிடம் வரம்பு மீறிய நபர் என்னை திருமணம் செய்து கொள
Reviewed by Author
on
April 20, 2017
Rating:

No comments:
Post a Comment