11 பேர் பலி; 20 பேர் காணவில்லை......கொலம்பியாவில் நிலச்சரிவில்.....
தென் அமெரிக்கா நாடான கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி குறைந்தது 11 பேர் பலியாகியுள்ளனர். 20 பேர் காணாமல் போயுள்ளனர்.
கொலம்பியா நாட்டின் கல்டாஸ் மாகாணத்தின் தலைநகர் மனிஜேல்ஸ் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் பெய்த கனமழையினால் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் குடியிருப்புவாசிகள் பலர் சிக்கினர்.
இந்த நிலையில் அந்நாட்டின் போக்குவரத்து துறை மந்திரி எடுவார்டோ ரோஜாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, மனிஜேல்ஸ் நகரில் ஏற்பட்டுள்ள நிலைமை வருத்தத்திற்குரியது. 11 பேர் பலியாகியுள்ளனர்.
இதில் 9 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் குறைந்தது 57 வீடுகள் சேதமடைந்துள்ளன என்றும் அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் அந்நாட்டின் மொகோவா மற்றும் புட்டுமேயோ ஆகிய நகர்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் 320க்கும் கூடுதலானோர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளை விட்டு வெளியேறினர் என்பது நினைவுக் கூரதக்கது.
11 பேர் பலி; 20 பேர் காணவில்லை......கொலம்பியாவில் நிலச்சரிவில்.....
Reviewed by Author
on
April 20, 2017
Rating:

No comments:
Post a Comment