வங்கதேசத்தை ஊதி தள்ளியது இலங்கை! பட்டையை கிளப்பினார் பெரேரா...
இலங்கை-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் பெரேராவின் அதிரடியால் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
இதன் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என இலங்கை அணி முன்னிலை பெற்றுள்ளது.
கொழும்பில் தொடங்கிய போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற வங்கதேச அணி முதலில் விளையாட முடிவு செய்தது.
அதன் படி முதலில் துடுப்பாடிய வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்கள் எடுத்தது. வங்கதேச அணி சார்பாக ஹுசைன் ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்கள் எடுத்தார். பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக லசித் மலிங்க 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இந்நிலையில், 156 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, பெரேராவின் அதிரடியால் 18வது ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ஓட்டங்கள் எடுத்து அசத்தல் வெற்றிப்பெற்றது.
இலங்கை அணி சார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய குசல் ஜனித் பெரேரா 77 ஓட்டங்கள் எடுத்தார். பந்து வீச்சில் வங்கதேச அணி சார்பாக மொட்டர்ஷா 2 விக்கெட்டை கைப்பற்றினார்.
வங்கதேசத்தை ஊதி தள்ளியது இலங்கை! பட்டையை கிளப்பினார் பெரேரா...
Reviewed by Author
on
April 05, 2017
Rating:

No comments:
Post a Comment