கூட்டமைப்புடன் இணைந்து அரசாங்கமும் திரைக்கு பின்னால் செயற்படுகின்றது....
நல்லாட்சி அரசாங்கமானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து திரைக்கு பின் இருந்து பல்வேறு விடயங்களை செய்வதற்கு திட்டம் தீட்டி வருவதாக கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினரும் பேராசிரியருமான ஜி.எல்.பீரிஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
புதிய அரசியலமைப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
புதிய அரசியலமைப்பு தொடர்பில் சில உடன்பாடுகள் எட்டப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால் அவ்வாறு எந்த ஒரு உடன்பாடும் எட்டப்படவில்லை என்பதே உண்மை. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து அரசாங்கமும் திரைக்கு பின்னால் இருந்து வேலை பார்த்துக்கொண்டு இருக்கின்றது.
இவ்வாறு அவர்களுடன் இணைந்து புதிய அரசியலமைப்பை தங்களுக்கு தெரியாமல் கொண்டு வர முயற்சி செய்துகொண்டு இருக்கின்றது.
இவ்வாறு நாட்டுக்கு தேவையான விடயங்களை கொண்டு வருவதில் இந்த அரசாங்கமானது அக்கறை காட்டாமல், தனக்கு தேவையானவற்றினை திரைக்கு பின்னால் இருந்து செய்து வருகின்றது.
இது மக்களை ஏமாற்றும் செயலாகவே உள்ளது, இதனாலேயே அவர்களுக்கு மக்கள் ஆதரவு குறைந்துகொண்டு செல்வதை அவர்களாலேயே அவதானிக்க முடிகின்றது.
இதன் காரணமாகவே அரசாங்கம் தற்போது தேர்தலை நடத்தாமல் கால தாமதப்படுத்திக்கொண்டு இருப்பதாக ஜி.எல்.பீரிஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
கூட்டமைப்புடன் இணைந்து அரசாங்கமும் திரைக்கு பின்னால் செயற்படுகின்றது....
Reviewed by Author
on
April 11, 2017
Rating:

No comments:
Post a Comment