உலகின் மிக உயரமான U வடிவில் நிர்மாணிக்கப்படும் கட்டிடம்...
தற்போதுள்ள நிலையில் உலகின் மிக உயரமான கட்டிடமாக துபாயில் அமைந்துள்ள Burj Khalifa கட்டிடம் காணப்படுகின்றது.
இதன் உயரம் 828 மீற்றர்கள் ஆகும். இச் சாதனையை முறியடிக்கும் வகையில் சுமார் 1,220 மீற்றர்கள் உயரமான கட்டிடம் ஒன்று நியூயோர்க்கில் வடிவமைக்கப்படவுள்ளது.
மேலும் இது தலைகீழான U வடிவில் அமைக்கப்படவுள்ளது. இக்கட்டிடத் தொகுதியானது Big Bend எனவும் அழைக்கப்படவுள்ளது.
இந்த தகவலை Tech Insider வெளியிட்டுள்ளது. Manhattan Developers இந்தக் கட்டிடத்தினை வடிவமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கிரேக்க நாட்டைச் சேர்ந்த பிரபல கட்டிடக் கலைஞரான Ioannis Oikonomou என்பவர் இது ஒரு புதிய வகை சாதனையாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
உலகின் மிக உயரமான U வடிவில் நிர்மாணிக்கப்படும் கட்டிடம்...
Reviewed by Author
on
April 01, 2017
Rating:

No comments:
Post a Comment