அமெரிக்கா-ரஷ்யா இடையே மோதல் வெடிக்கும் அபாயம்.....
அமெரிக்காவை நேரடியாக எதிர்க்கும் முடிவுக்கு நான் தயார் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் சிரிய பகுதியில் இரு நாடுகளும் மோதலில் ஈடுபடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சிரியா மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதையடுத்து அமெரிக்காவுக்கும், தங்களுக்குமுள்ள ராணுவ தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
சிரியா தொடர்பாக 2015ல் இருந்து ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்குமிடையே Deconfliction channels என்ற ஒரு நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
அதன்படி வடகிழக்கு சிரியா பகுதியில், அமெரிக்க மற்றும் ரஷ்ய விமான ஓட்டிகள் தங்கள் விமானங்களுக்கு இடையே கணிசமான இடைவெளி இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
ஒருவருக்கொருவர் தாக்கக் கூடாது என்பதாகும். இதற்காக 'ஹாட்லைன்' வசதி2 நாடுகளுக்கிடையே உருவானது.
இந்த வசதியை இப்போது ரஷ்ய ஜனாதிபதி துண்டித்திருக்கிறார். இதனால் ரஷ்ய, அமெரிக்க விமானங்கள் சிரிய வான்வெளியில் மோதலில் ஏற்படும் வாய்ப்புள்ளது.
மேலும், அமெரிக்காவை நேரடியாக எதிர்க்கும் முடிவுக்கு நான் தயார் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா-ரஷ்யா இடையே மோதல் வெடிக்கும் அபாயம்.....
Reviewed by Author
on
April 12, 2017
Rating:
Reviewed by Author
on
April 12, 2017
Rating:


No comments:
Post a Comment