செங்கலடியில் முன்னாள் பெண் போராளி தூக்கிட்டு தற்கொலை சடலத்தை பெறுவதில் உறவினர்களுக்கு தாமதம்!
செங்கலடி சந்தை வீதியில் வசிக்கும் யோகேந்திரன் ரமணி 6வயது குழந்தையின் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்..
இவரது கணவரும் போராளியாகயிருந்து உயிரிழந்தவர்.…
விரக்தியில் தமது குழந்தையின் எதிர்காலத்தை யோசிக்காமல் தூக்கு போட்டு நேற்று தற்கொலை செய்துள்ளார்.
சடலம் செங்கலடி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
செங்கலடி பிரதேச செயலக கிராமங்கள், ஏறாவூர் பற்று முஸ்லிம் பிரதேசங்களுக்கு பொதுவாக ஒரு மரண விசாரணையதிகாரி அவர் தனது தனிப்பட்ட தேவைநிமிர்த்தம் கொழும்பு சென்றிருப்பதால் செங்கலடி பிரதேச செயலக கிராமத்திற்குரிய சட்ட வைத்தியதிகாரி உள்ள போதும் சடலத்தை மரண விசாரனையதிகாரி இல்லாததால் நேற்று மாலை செங்கலடி வைத்தியசாலை பிணைவறையில் ஏறாவூர் போலிசாரினால் கொண்டு வைக்கப்பட்ட நிலையில் சடலத்தை பெறுவதற்காக உறவினர்கள் வீதியில் கவலையுடன் அமர்ந்துள்ளார்கள்.
ஆனால் வேறு வைத்தியசாலையிலிருந்தாவது ஒரு மரணவிசாரனையதிகாரி மூலம் உரிய முறையை பின்பற்றி சடலத்தை தாமதமின்றி துரிதமாக கொடுப்பதற்கு ஏறாவூர் போலிசார் முயற்சி செய்வது சிறந்தது.
செங்கலடி பிரதேச செயலகத்தில் 20ற்கு மேற்பட்ட தமிழ்கிராமங்கள் காணப்படுகின்றது.இதற்கு தனியான மரணவிசாரனையதிகாரியாக ஒருவரை நியமித்தால்சிறந்தது என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இது விடயத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் அரசியல்வாதிகள் கவனத்தில் எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
செங்கலடியில் முன்னாள் பெண் போராளி தூக்கிட்டு தற்கொலை சடலத்தை பெறுவதில் உறவினர்களுக்கு தாமதம்!
Reviewed by NEWMANNAR
on
May 08, 2017
Rating:

No comments:
Post a Comment