வெளியானது பிரான்ஸ் தேர்தல் முடிவு! வெற்றி பெற்றார் இமானுவல் மக்ரான்!
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் லிபரல் சென்டிரிஸ்ட் கட்சியை சேர்ந்த இமானுவல் மக்ரான் வெற்றி பெற்றுள்ளார்.
பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குபதிவு கடந்த மாதம் 23ஆம் திகதி நடைபெற்றது.
இதில் போட்டியிட்ட 11 வேட்பாளர்களில் லிபரல் சென்டிரிஸ்ட் கட்சியை சேர்ந்த இமானுவல் மக்ரோங்-கும், தீவிர வலதுசாரி தேசியவாத தலைவர் மரைன் லெ பென்னும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
இந்நிலையில், இறுதி சுற்றுக்கான வாக்குபதிவு இன்று தொடங்கி நடைபெற்று வந்தது.
இதைத் தொடர்ந்து இன்று இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் லிபரல் சென்டிரிஸ்ட் கட்சியை சேர்ந்த இமானுவல் மேக்ரான் 65 சதவிகித வாக்குகளுடன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மெரீனை வீழ்த்தினார்.
மேக்ரானுக்கு கடும் போட்டியாக இருந்த மெரீன் தனது தோல்வியை ஏற்று கொண்டார். மக்ரானை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசிய மெரீன், வலிமையான எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என கூறியுள்ளார்.
மேக்ரான் வெற்றி பெற்றதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் தங்களது மகிழ்ச்சியை தலைநகர் பாரிசில் உள்ள Louvre மியூசியம் பகுதியில் முத்தம் வடிவில் வெளிப்படுத்தினர்.
இதில் ஏராளமானோர் நீலம், வெள்ளை, மற்றும் சிவப்பு நிறத்தினால் ஆன கொடியை காண்பித்தபடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மேலும் 39 வயதான இமானுவேல் மேக்ரான் பிரான்ஸ் வரலாற்றில் புதிய சாதனையைப் படைத்திருக்கிறார். குறைந்த வயதில் அந்த நாட்டின் ஜனாதிபதியாக தெரிவாகிய நபர் இவர் என்பதை அவர் தனதாக்கியுள்ளார்.
இதனால் பெரும் உற்சாகம் பொங்க அவர் தன்னுடைய வெற்றியை ஆதரவாளர்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார். அந்நாட்டின் 25வது ஜனாதிபதியாக அவர் விரைவில் பொறுப்பேற்கவுள்ளவுள்ளார்.

வெளியானது பிரான்ஸ் தேர்தல் முடிவு! வெற்றி பெற்றார் இமானுவல் மக்ரான்!
Reviewed by Author
on
May 08, 2017
Rating:

No comments:
Post a Comment