வடக்கு கிழக்கில் நல்லிணக்கத்திற்கு 1500 மில்லியன்!
வடக்கு, கிழக்கில் நல்லிணக்க நடவடிக்கைகளை முன்கொண்டு செல்லும் முகமாக 1500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதியின் மூலம் நல்லிணக்கத்தை மையப்படுத்தி பொருளாதார மேம்படுத்தல் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அத்துடன் வடக்கு மற்றும் தெற்கு பிரதேசங்களுக்கு இடையில் வர்த்தக தொடர்பை மேம்படுத்தவும் இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.
தேசிய நல்லிணக்க அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இந்தநிதியினால் வடக்கு கிழக்கின் எல்லைப்புற கிராமங்களின் உற்பத்திகளுக்கு ஏற்றுமதி வாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் செயல்திட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது.
முழுமையாக இந்த திட்டத்தின்மூலம் வடக்கு கிழக்கு மற்றும் தென்பகுதிகளுக்கு இடையில் ஒற்றுமையை கட்டியெழுப்ப எதிர்ப்பார்க்கப்படுவதாக அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கில் நல்லிணக்கத்திற்கு 1500 மில்லியன்!
Reviewed by Author
on
May 15, 2017
Rating:

No comments:
Post a Comment