7,000 டொலர் தாள்களை விழுங்கிய பெண்: ஏன் தெரியுமா?
அமெரிக்காவில் பெண் ஒருவரின் வயிற்றில் இருந்து 7,000 டொலர் தாள்களை அறுவை சிகிச்சையின் மூலம் மருத்துவர்கள் அகற்றியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள கொலம்பியா நகரில் பெயர் வெளியிடப்படாத கணவன், மனைவி ஆகிய இருவர் வசித்து வருகின்றனர்.
கணவனுடன் விடுமுறைக்கு வெளிநாடு செல்ல வேண்டும் என திட்டமிட்ட மனைவி கணவனுக்கு தெரியாமல் பணத்தை சேமித்து வந்துள்ளார்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் பணம் காணாமல் போனதால் கணவன் வீடு முழுவதும் தேடியுள்ளார்.
தன்னிடம் இருப்பதை கணவர் தெரிந்துக்கொள்ளக் கூடாது என திட்டமிட்ட மனைவி உடனடியாக தன்னிடம் இருந்த அத்தனை பணத்தையும் வெளியே எடுத்துள்ளார்.
100 டொலர் தாள் மொத்தம் 57 இருந்துள்ளது. சிறிதும் சிந்திக்காத அப்பெண் அத்தனை தாள்களையும் விழுங்கியுள்ளார்.
அதாவது, கணவனிடம் இருந்து பணத்தை மறைப்பதற்காக மனைவி இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்.
ஆனால், துரதிஷ்டவசமாக வயிற்று வலி எடுக்க துவங்கியதும் இருவரும் மருத்துவமனக்கு சென்றுள்ளனர்.
பெண்ணின் வயிற்றை ஸ்கேன் செய்து பார்த்தபோது மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அப்போது, வயிற்றில் கரன்ஸி தாள்கள் மிதந்துக்கொண்டு இருந்துள்ளது.
உடனடியாக நிலையை கணவனிடம் தெரிவித்த மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என கணவனிடம் கேட்டுள்ளனர்.
மருத்துவர்களின் விளக்கத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த கணவர் அறுவை சிகிச்சைக்கு அனுமதி அளித்துள்ளார்.
பின்னர், பெண்ணிற்கு சிகிச்சை முடித்து அவரது வயிற்றில் இருந்து 57 தாள்களை வெளியே எடுத்துள்ளனர். எனினும், சில தாள்கள் பெருங்குடல் வழியாக சென்றுவிட்டதால் அவற்றை மருத்துவர்கள் வெளியே எடுக்க முடியவில்லை.
பெண் விழுங்கிய தாள்களின் மதிப்பு 7,000 டொலர் எனக்கூறப்படுகிறது.
கணவனுக்கு தெரியாமல் பணத்தை மறைக்க எண்ணி அவை அனைத்தையும் பெண் ஒருவர் விழுங்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
7,000 டொலர் தாள்களை விழுங்கிய பெண்: ஏன் தெரியுமா?
 Reviewed by Author
        on 
        
May 04, 2017
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
May 04, 2017
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
May 04, 2017
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
May 04, 2017
 
        Rating: 

 
 
.jpg) 

 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment