தீவிரவாதி என நினைத்து அமைச்சரை சுட்டுக்கொன்ற பாதுகாப்பு படை....
சோமாலியா நாட்டில் தீவிரவாதி என நினைத்து அமைச்சர் ஒருவரை அந்நாட்டு பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக்கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சோமாலியா நாட்டின் தலைநகரான Mogadishu நகரில் தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சோமாலியாவில் தீவிரவாதிகள் மற்றும் போராளிகள் அடிக்கடி அரசுக்கு எதிராக தற்கொலை படை தாக்குதலில் ஈடுப்பட்டு வருவதால் தலைநகரில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு கடுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பொதுப்பணி மற்றும் மறுசீரமைப்பு அமைச்சரான Abdullahi Sheikh Abas(31) என்பவர் நேற்று ஜனாதிபதியை சந்திப்பதற்காக மாளிகைக்கு காரில் சென்றுள்ளார்.
அப்போது, மாளிகைக்கு வெளியே பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள் காரில் வருவது தற்கொலை படை தீவிரவாதிகள் என தவறுதலாக எண்ணி சரமாரியாக தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இச்சம்பவத்தில் காருக்குள் அமர்ந்திருந்த அமைச்சர் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தாக்குதலுக்கு பின்னர் தான் அவர் அமைச்சர் என்பது பாதுகாப்பு படை வீரர்களுக்கு தெரியவந்துள்ளது.
இத்தகவல் உடனடியாக ஜனாதிபதிக்கு தெரிவிக்கப்பட்டதும் இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோமாலியா நாட்டில் கடந்த நவம்பர் நடைபெற்ற தேர்தலில் மிகவும் இளம் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் Abdullahi Sheikh Abas தெரிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தீவிரவாதி என நினைத்து அமைச்சரை சுட்டுக்கொன்ற பாதுகாப்பு படை....
 Reviewed by Author
        on 
        
May 04, 2017
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
May 04, 2017
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
May 04, 2017
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
May 04, 2017
 
        Rating: 

 
 
 

 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment