அமெரிக்காவை ஆட்டிப்படைத்த தனி மனிதன் : பகிரங்கமாக தோல்வியை ஒப்பு கொண்ட FBI
உலகத்தில் அனைத்து நாடுகளுக்கும் சவாலாக திகழும் புலனாய்வுத் துறை, அமெரிக்காவின் எப். பி. ஐ (FBI) அமைப்பாகும் (Federal Bureau of Investigation).
ஒட்டு மொத்த உலகத்திற்கும் இந்த புலனாய்வுத் துறை அதி முக்கியமானது. உலகில் தீவிரவாதம் முதல் பல்வேறு வகையான சுமார் 200 இற்கும் மேற்பட்ட குற்ற வகைகளுக்கு எதிரான அதிகார எல்லையைக் கொண்டது.
இவ்வாறான சக்தி மிக்க புலனாய்வுத்துறை, 46 வருடங்களின் பின்னர் அண்மையில் ஒரு வழக்கில் தனது தோல்வியினை பகிரங்கமாக ஒப்புக்கொண்டது.
உலகின் தலை சிறந்த புலனாய்வுத்துறையை ஓர் தனி மனிதன் முட்டாளாக்கியதோடு, அமெரிக்காவிற்கும் ஆட்டம் காட்டி 46 வருடங்கள் அமெரிக்காவின் கண்களிலும், FBI கண்களிளும் மண்ணைத் தூவியுள்ளான்.
டான் கூப்பர் அல்லது டி.பி. கூப்பர் எனப்படும் தனி நபரே இவ்வாறு இன்று வரை அமெரிக்காவிற்கு மிகப்பெரிய சவாலாக திகழ்கின்றான்.
1971ஆம் ஆண்டு அமெரிக்க போர்ட்லேன்ட் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சியாட்டில் நகர் நோக்கி செல்ல இருந்த போயிங் 727- 100 என்ற விமானத்தில் பகல் 2.50 மணியளவில் டான் கூப்பர் பயணத்தை ஆரம்பித்தான்.
விமானம் புறப்பட்டு சிறிது நேரத்தில், தான் அந்த விமானத்தை கடத்தப்போவதாக அறிவித்தான். அந்த விமானத்தில் 36 பயணிகள் இருந்தனர்.
வெடிகுண்டுகள் அடங்கிய பெட்டியுடன் டான் கூப்பர் இருந்ததால் அமெரிக்காவே அதிர்ந்து அலறியது. டான் கூப்பரின் கோரிக்கையை கேட்டது.
கூப்பர் 2 இலட்சம் அமெரிக்க டொலர்களையும், 2 பாரசூட்டுகளையும் தன் கோரிக்கையாக முன்வைத்தான். இதற்கு அமெரிக்கா அரசு ஒப்புதல் அளித்தால்.,
சியாட்டில் விமானம் தரையிறங்கும் போது பயணிகளை மட்டும் விடுவிப்பதாக அறிவித்தான். அமெரிக்க அரசு அதற்கு ஒப்புதல் அளித்தது.
சியாட்டில் விமான நிலையத்தில் வைத்து அமெரிக்க அரசு டான் கூப்பர் கேட்டதைக் கொடுத்தது. அவனும் பயணிகளை விடுவித்தான்.
பின்னர் 2 விமானிகளும், பணிப்பெண்களையும் விமானத்தில் சிறைபிடித்து, சியாட்டில் விமானத்துக்கு தேவையான எரிபொருளை நிரப்பிக்கொண்டு அதன் பின் மெக்சிகோ செல்ல வேண்டும் எனவும் டான் கூப்பர் உத்தரவிட்டான்.
அதன் படி விமானம் மெக்சிகோ நோக்கி பயணித்தபோது, 10,000 அடி உயரத்தில், 120 மைல் வேகத்தில் பயணிக்க வேண்டும் என கூறிய கூப்பர், விமானத்தின் இறக்கைப் பகுதி 15 பாகை டிகிரியில் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளான்.
அதன் படி விமானம் பயணம் செய்துள்ளது. கூப்பரை எப்படியும் கைது செய்யும் நோக்கோடு அமெரிக்க இராணுவத்தை சேர்ந்த விமானங்கள் 3 போயிங் 727- 100 (கூப்பரை) விமானத்தை பின்தொடர்ந்தது.
அதின் ஒன்று கூப்பர் சென்ற விமானத்திற்கு நேர் மேலும், மற்றையது கீழும், 3ஆவது பின்னாலும் சென்றுள்ளது. அவனின் கண்களில் படாமல் அதே சமயம் கூப்பர் தப்பிச் செல்ல விடக்கூடாது என கழுகுப்பார்வையோடு சென்றன.
எனினும் சுமார் 8.15 மணியளவிற்கு பின்னர் கூப்பர் விமானத்தில் இல்லை. கூப்பர் அந்த விமானத்தில் இருந்து பரசூட் வழியாக தப்பிச் சென்றுவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது.
அவன் எப்படி அமெரிக்க விமானங்களின் பார்வையில் இருந்து தப்பினான், கீழே இராணுவ விமானம் தொடர பாரசூட்டில் எவ்வாறு குதித்தான் என்று விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
கூப்பரின் புகைப்படங்களை வெளியிட்டு அவனை FBI தேடியது. பிடித்துக் கொடுப்பவர் அல்லது தகவல் கூறுகின்றவர்களுக்கு பரிசளிப்பதாகவும் அமெரிக்கா அறிவித்தது.
எனினும் கண்டு பிடிக்கப்படவில்லை. அமெரிக்காவில் மிகப்பெரிய குற்றமாக கருதப்பட்ட இந்த விமானக் கடத்தலுக்கு கூப்பர் என்ற தனி மனிதன் மட்டுமே காரணமாக இருந்துள்ளான் எனவும் அமெரிக்க FBI முடிவு செய்தது.
ஒட்டு மொத்த அரசாங்கமும், FBI யோடு இணைந்து கூப்பரை கண்டு பிடிக்க தீவிரமாக முயற்சி செய்தது எனினும் இன்று வரை கூப்பர் சிக்கவில்லை. எப்படி தப்பினான் என்பதும் கண்டு பிடிக்கவில்லை.
தொடர்ந்து 45 வருடங்களாக FBI தீவிர தேடலில் ஈடுபட்டு கண்டு பிடிக்க முடியாத காரணத்தினால் அண்மையில் அந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வரும் நிமித்தம் தனது தோல்வியை FBI பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.
சர்வதேச நாடுகளுக்கும் ஆட்டம் காட்டும் FBI யின் கழுகுப் பார்வை இவ்விதம் தோல்வியை சந்தித்ததும் இதுவே முதல் முறை எனவும் கூறப்படுகின்றது.
மேலும் ஓர் கதாநாயகனாக பார்க்கப்பட்ட டான் கூப்பர் செய்த கடத்தலைப் போன்றே பல கடத்தல்கள் அமெரிக்காவில் திட்டமிடப்பட்டன எனவும் அனைத்தும் தோல்வியையே தழுவியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவனை முன்வைத்து திரைப்படங்களும் கூட எடுக்கப்பட்டன என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்கது.
இதேவேளை உலக வல்லரசுகளுக்கும் ஆட்டம் காட்டுவிக்கும் அமெரிக்காவையும், தீவிரவாத அமைப்புகள் அனைத்திற்கும் அச்சுறுத்தலாக திகழும் FBI புலனாய்வுத் துறையையும்.,
தனி மனிதனான டான் கூப்பர் அலற வைத்த சம்பவம் மேலைத்தேய ஊடகங்களில் பெரிதாக பேசப்படுகின்றது.

அமெரிக்காவை ஆட்டிப்படைத்த தனி மனிதன் : பகிரங்கமாக தோல்வியை ஒப்பு கொண்ட FBI
Reviewed by Author
on
May 01, 2017
Rating:

No comments:
Post a Comment