H1N1 தொற்றால் ஒன்றரை வயது குழந்தை மரணம்
இன்புளுவன்சா H1N1 தொற்று காரணமாக ஒன்றரை வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ள சம்பவம் அக்குரஸ்ஸ போபகொட பிரதேசத்தில் நேற்றைய தினம் பதிவாகியுள்ளது.
சளிக்காய்ச்சல் காரணமாக குறித்த குழந்தை மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது,குழந்தை நேற்றிரவு உயிரிழந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் தொற்று காரணமாக குறித்த குழந்தை கடந்த ஏழு நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் குழந்தையை முன் கூட்டியே வைத்தியசாலையில் அனுமதித்திருந்தால் குழந்தையின் உயிரை காப்பாற்றி இருக்க முடியும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இன்புளுவன்சா H1N1 தொற்று காரணமாக மாத்தறை,அக்குரஸ்ஸ பகுதிகளில் உள்ள மக்கள் அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
H1N1 தொற்றால் ஒன்றரை வயது குழந்தை மரணம்
Reviewed by Author
on
May 20, 2017
Rating:

No comments:
Post a Comment