மன்னார் நகர எல்லைக்குட்பட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்க தெரிவு அமைதியான முறையில் இடம் பெற்றது-வடக்கு அமைச்சர்.பா.டெனிஸ்வரன்.(படம்)
மன்னார் நகர எல்லைக்குட்பட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர்களது சங்கத்தின் புதிய நிர்வாகத்தெரிவிற்கான பொதுக்கூட்டம் மன்னார் நகர மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை இடம் பெற்றுள்ளதோடு,புதிய நிர்வாகத்தெரிவுகளும் இடம் பெற்றுள்ளதாக வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.
-குறித்த பொதுக்கூட்டத்தில் வடக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் ஏ.நீக்கிலாப்பிள்ளை , மன்னார் நகரசபையின் செயலாளர் சேவியர் பிரிட்டோ லெம்பேட் மற்றும் உப போலீஸ் அதிகாரி ஆகியோர் சமூகமளித்திருந்தனர்.
இவ் ஒன்றுகூடலுக்கு மன்னார் நகர எல்லைக்குட்பட்ட 12 முச்சக்கரவண்டி தரிப்பிடங்களை சேர்ந்த பதிவு செய்யப்பட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் கலந்து கொண்டு புதிய நிர்வாக தெரிவு இடம் பெற்றது.
தொடர்ந்து பொதுச்சபையில் இருந்து தெரிவுகள் இடம் பெற்றது.
அந்தவகையில் தமிழ் முஸ்லீம் என்ற அடிப்படையில் சம அளவில் தெரிவுகள் அமைந்ததோடு போட்டி இல்லாமல் மிகவும் விட்டுக்கொடுப்போடும் மிகுந்த ஒற்றுமையோடும் புதிய நிர்வாகம் உருவானது.
அவ்வாறு உருவான புதிய நிர்வாக சபையினை அமைச்சரும் வாழ்த்தியதோடு இவ்வாறான ஒரு ஒற்றுமையான நிர்வாகத்தெரிவை தாம் இங்கேயே கண்டதாகவும் ஆகவே தனது உள்ளத்தில் இருந்து பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.
அந்தவகையில் புதிதாக உருவாக்கப்பட்ட நிர்வாகமானது 02 ஆண்டுகள் பதவியில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மன்னார் நகர முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் பதவிகள் மற்றும் பெயர் விபரங்கள் பின்வருமாறு...
தலைவர் - கே.நாகராசா
செயலாளர் - ஏ.கே. நசுருதீன்
பொருளாளர் - எஸ்.ஏ.யுஸ்ட்டின்
உப தலைவர் - எம்.ஆர்.மவுயுத்
உப செயலாளர் - எஸ்.முருகதாஸ்
நிர்வாகசபை உறுப்பினர்கள்
01 - எஸ்.கொன்சிகன்
02 - எஸ்.நியாஸ் 03 - கே.சதாவதனன்
04 - எம்.எம்.தௌலத்
05 - எம்.றொன்சலன் குரூஸ்
06 - எச்.எம்.நிஜிமி
முச்சக்கரவண்டி தரிப்பிட பொறுப்பாளர்கள்
வெலிகம தரிப்பிடம் - வி.சாந்தகுமார்
பேரூந்து நிலைய தரிப்பிடம் - என்.எஸ்.அண்டனி பெனாண்டோ
நகரசபை தரிப்பிடம் - ஏ.ஆர்.சபர்ஜான்
பிரதேச செயலக தரிப்பிடம் - எஸ்.வரதராஜா
பொதுவிளையாட்டரங்கு தரிப்பிடம் - ஏ.சி.எல்.கரன்ராஜ்
வைத்தியசாலை தரிப்பிடம் யு - வெ.கிருஸ்ணகுமார்
வைத்தியசாலை தரிப்பிடம் டீ - மா.குமரேஸ்வரன்
கமுதாவ தரிப்பிடம் - எஸ்.ஜெனிபெட் லியோ
எழுத்தூர் தரிப்பிடம் - எஸ்.நிசாந்தன்
மீன்சந்தை தரிப்பிடம் - எஸ்.நிமலகாந்தன்
இலங்கை வங்கி தரிப்பிடம் - கே.எம்.ஜாபிர்
பள்ளிமுனை தரிப்பிடம் - என்.சுவக்கீன் றோச்
-ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வடக்கு அமைச்சர் பா.டெனிஸ்வரன் மேலும் தெரிவித்தார்.
மன்னார் நகர எல்லைக்குட்பட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்க தெரிவு அமைதியான முறையில் இடம் பெற்றது-வடக்கு அமைச்சர்.பா.டெனிஸ்வரன்.(படம்)
Reviewed by NEWMANNAR
on
May 17, 2017
Rating:

No comments:
Post a Comment