மன்னாரில் சுய தொழில் முயற்சியாளர்கள் முன்னிலையில் அமைச்சர் றிஸாட்-படம்
இங்குள்ள பலருக்கு ஆற்றலும் திறமையும் இருந்தும் ஆதரவு கொடுக்க யாருமில்லாத நிலையில் நாங்கள் கை கொடுக்க முன் வந்துள்ளோம்-
இன,மத வேறுபாடுகளுக்கு அப்பால் மனித நேயத்தையும் மக்கள் நலனையும் இலக்காகக் கொண்டு சுய தொழில் முயற்சியாளர்களின் நலனுக்காக மக்களின் காலடிக்கு வந்து,தமதுஅமைச்சின் கீழான நிறுவனங்கள் மேற்கொள்ளும் இந்த திட்டத்தின் மூலம் உச்சப் பயனைப் பெற்றுக்கொள்ளுமாறு அமைச்சர் றிஸாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார்.
அமைச்சர் றிஸாட் பதியுதீனின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக்கமைவாக, மன்னார் மாவட்டத்தில் உள்ள தொழில் முயற்சியாளர்களின் நலன் கருதி கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழ் செயற்படுகின்ற நிறுவனங்களை ஒருங்கிணைத்து மன்னார் நகர சபை மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை (29) காலை தொழில் முயற்சி இனங்காணலும் ஊக்க மூட்டலுக்குமான விழிப்புணர்வுச் செயலமர்வு இடம் பெற்றது.
-குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.
-அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,,,
வன்னி மாவட்டம் யுத்தப் பாதிப்புக்களால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட ஒன்று. இங்குள்ள மக்கள் சொந்தமாகவும், சுதந்திரமாக, சுயதொழில் செய்து வாழ வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த சேவை நடாத்தப்படுகின்றது.
சுய தொழில் முயற்சியாளர்கள் தமக்கு ஏற்ற,தாம் விரும்பிய தொழிலை மேற்கொள்வதற்கு எனது அமைச்சு உதவும். அமைச்சின் கீழான நிறுவனங்கள், தொழில் முயற்சியாளர்களுக்கு பொருத்தமான உதவிகளை வழங்க திட்டமிட்டுள்ளது.
என வேதான் அனைத்துத் திணைக்களங்களையும் ஒன்றினைத்து ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து இந்த இடம் பெயர் சேவையை நடாத்துகின்றோம்.
இதன் மூலம் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் குடும்பச் சுமையைக் குறைக்கவும் முடியுமென நம்புகின்றோம்.
உங்களிடம் வழங்கப்பட்டுள்ள கோவையிலிருக்கும் விவரங்களை வாசித்து, உங்களுக்கு ஏற்புடைய ஏதாவது ஒரு தொழிலை அடையாளப்படுத்தி அதிகாரிகளிடம் கொடுத்தால் மேற்கொண்டு நடவடிக்கை எடுப்போம்.
பயிற்சிகளோ, குறித்த தொழிலுக்கு தேவையான உபகரணங்களோ அல்லது கடன் உதவியோ வழங்கப்படும். அது மட்டுமன்றி உற்பத்திப் பொருட்களை சந்தைப்படுத்தவதற்குக் கூட வசதிகள் செய்து தரப்படும்.
இந்த மாவட்டத்திலே தென்னை,பனை வளம் உற்பட நிரம்ப வளங்கள் தாராளமாக உண்டு அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் உங்கள் மனதில் பட்டதை கூறினால் அதற்கும் உதவக் காத்திருக்கின்றோம்.
தனி நபர்கள் மாத்திரமின்றி கூட்டாகவும் சுயதொழிலை மேற்கொள்ள முடியும்.
கூட்டு முயற்சியின் மூலம் கூட்டுறவின் அடிப்படையில் அதனை உருவாக்கி பங்கு தாரர்களாக மாறுங்கள். அது நீண்ட காலம் நிலைக்கக்கூடிய முயற்சியாகும்.
இங்குள்ள பலருக்கு ஆற்றலும் திறமையும் இருந்தும் ஆதரவு கொடுக்க யாருமில்லாத நிலையில் நாங்கள் கை கொடுக்க முன் வந்துள்ளோம்.
இந்த நடமாடும் சேவையில் ஆலோசனைகளையும் வழி காட்டல்களையும் வழங்குவதற்காக திணைக்களங்களின் தலைவர்களும் உயர் அதிகாரிகளும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இங்கு வந்துள்ளனர்.
எனவே உரிய முறையில் நடமாடும் சேவையை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
-இதன் போது வர்த்தக அமைச்சின் கீழ் செயற்படுகின்ற நிறுவனங்களின் பிரதி நிதிகள் கலந்து கொண்டு திணைக்களம் மற்றும் நிறுவனங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் தொழில் பயிற்சிகள், தொழில் முயற்சிக்கான உதவித்திட்டங்கள் தொடர்பாக இதன் போது மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
-இதன் போது ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு பயணடைந்துள்ளதோடு,தமது சுய தொழில் தொடர்பில் விண்ணப்பங்களையும் பதிவு செய்து அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர்.
மன்னார் நிருபர்-
மன்னாரில் சுய தொழில் முயற்சியாளர்கள் முன்னிலையில் அமைச்சர் றிஸாட்-படம்
Reviewed by Author
on
May 29, 2017
Rating:

No comments:
Post a Comment