வவுனியாவில் அமைச்சர் ரிசாத்தை சுற்றிவளைத்த சுகாதாரத் தொண்டர்கள்...
வவுனியாவில் இன்று அமைச்சர் ரிசாத் பதியூதீனை சுகாதாரத் தொண்டர்கள் சுற்றி வளைத்து தமது நிரந்தர நியமனம் தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர்.
வவுனியா காமினி மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற கைத்தொழிலாளர்களுக்கான செயலமர்வு ஒன்றிற்கு வருகை தந்தபோதே அமைச்சரை சுகாதாரத் தொண்டர்கள் சுற்றி வளைத்துள்ளனர்.
இதன்போது அமைச்சர் ரிசாத் பதியூதீன் கருத்துத் தெரிவிக்கையில்,
சுகாதார அமைச்சரிடம் தான் உங்களுக்கு நியனம் பெற்றுக்கொள்ள அதிகாரம் உள்ளது. அவருடன் கலந்துரையாடி பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் கடந்த 25 நாட்களாக தமக்கு நிரந்தர நியமனம் பெற்றுத்தருமாறு கோரி சுகாதாரத் தொண்டர்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் அமைச்சர் ரிசாத்தை சுற்றிவளைத்த சுகாதாரத் தொண்டர்கள்...
Reviewed by Author
on
May 29, 2017
Rating:

No comments:
Post a Comment