மன்னார் தட்சணாமருதமடு மகாவித்தியாலயத்தில் ஒரே நாளில் நான்கு திறப்பு விழாக்கள்....படங்கள் இணைப்பு
மன்னார் மாவட்ட மடு கல்வி வலயத்திற்குட்பட்ட தட்சணாமருதமடு மகாவித்தியாலயத்தில் 23-05-2017 செவ்வாய் காலை 11 மணியளவில் இடம்பெற்ற திறப்புவிழாவில் 04 வேறுபட்ட விடயங்கள் திறந்துவைக்கப்பட்டது.
நிகழ்வில்.....
கெளரவ விருந்தினராக
தட்சணாமருதமடு ஸ்ரீ முருகன் ஆலய குருக்கள் சிவஸ்ரீ பன்னீர்ச்செல்வம் சர்மா அவர்களும்,
பிரதம விருந்தினராக
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும்,
சிறப்பு விருந்தினர்களாக
மடு கல்வி வலய பணிப்பாளர் டி.ஜோன்குயின்டஸ் அவர்களும், மடு பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.றொகான் குருஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வை கல்லூரியின் அதிபர் ஜெராட் அல்மேடா அவர்கள் தலைமையேற்று நடத்தினார். இவ் நிகழ்வில் தட்சணாமருதமடு மகாவித்தியாலயத்தில் " அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை நிகழ்ச்சித்திட்டத்தின்கீழ்" புனரமைக்கப்பட்ட கட்டிடத்தொகுதியும், புதிதாக அமைக்கப்பட்ட நீர்த்தாங்கி, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான துவிச்சக்கரவண்டி நிறுத்தகம் மற்றும் பாடசாலை பிரதான நுழைவாயில் வளைவு ஆகிய நான்கு பிரதான விடயங்கள் சுமார் 10.05 (பத்து தசம் ஐந்து) மில்லியன் செலவில் அமைக்கப்பட்டு அவை இன்று உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.
நிகழ்வில் அமைச்சர் உரையாற்றுகையில் பாடசாலைகளுக்கு பெளதீக வளங்களை நாம் நிறைவாக செய்து தரும்போது அதன் பலன் அல்லது வெளிப்பாடு மாணவர்களது கல்வியின் வெளிப்பாட்டிலேயே தங்கியிருக்கிறது என்றும், அவ்வாறு அவர்களை ஊக்கப்படுத்தும் நல்லதொரு ஆசிரியர்குழாமை இயக்குகின்ற அதிபரை தாம் பாராட்டுவதாகவும் அந்தவகையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சாதாரண தர பெறுபேறுகள் உயர்வுநிலையை அடைந்துள்ளமை சந்தோஷத்தை தருவதாகவும் தொடர்ந்து இதே வேகத்துடனும் விடா முயற்சியுடனும் மாணவர்சமூகம் மற்றும் பெற்றோர் ஆசிரியர்கள் அயராது உழைத்து மடு வலயத்தின் கல்வி நிலையை மென்மேலும் உயர்த்தவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதோடு.
அதிபரது வேண்டுகோளிற்கிணங்க இந்த பாடசாலையின் கேட்ப்போர்கூடத்திற்கான கதிரைத்தொகுதியை இந்த ஆண்டு எனது நிதி ஒதுக்கீட்டில் இருந்து பெற்றுத்தருவதாகவும் வாக்குறுதிவழங்கினார்.
நிகழ்வின் நிறைவில் பாடசாலையில் அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் புதிய ஆசிரியர் விடுதியையும் அமைச்சர் மற்றும் குழுவினர் பார்வையிட்டனர்.

மன்னார் தட்சணாமருதமடு மகாவித்தியாலயத்தில் ஒரே நாளில் நான்கு திறப்பு விழாக்கள்....படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
May 24, 2017
Rating:

No comments:
Post a Comment