முல்லைத்தீவில் நீதிமன்ற உத்தரவையும் மீறும் சிங்கள மீனவர்கள்....
முல்லைத்தீவு - கொக்கிளாய் கடற்பகுதியில் நீதிமன்ற உத்தரவையும் மீறி மீனவர்கள் கடற்தொழிலில் ஈடுபட்டுவருவதாக வட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நீதிமன்ற உத்தரவை மீறி கடற்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் சிங்கள மீனவர்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி செயற்பாடுகள் குறித்து பிரதேச செயலக அதிகாரி மற்றும் கிராம உத்தியோகஸ்தர் ஆகியோர் அதிருப்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.
மேலும், கொக்கிளாய் கடற்பரப்பில் மீன்பிடித் தொழில் செய்வதற்கான கரைவலைப்பாட்டின் உரிமம் தொடர்பான பிரச்சினை எழுந்த நிலையில், அது தொடர்பான வழக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவில் நீதிமன்ற உத்தரவையும் மீறும் சிங்கள மீனவர்கள்....
Reviewed by Author
on
May 02, 2017
Rating:

No comments:
Post a Comment