மன்னார் கீரி கடற்கரைப்பகுதியில் அமைக்கப்பட்ட 'கீரி சுற்றுலா கடற்கரை' வடமாகாண முதலமைச்சரினால் வைபவ ரீதியாக திறந்து வைப்பு.(படங்கள் )
மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட கீரி கடற்கரை பகுதியில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட 'கீரி சுற்றுலா கடற்கரை' வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களினால் இன்று செவ்வாய்க்கிழமை(2) காலை  வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
-முதலமைச்சரின் அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி கொடை நிதியில் 3.51 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட குறித்த 'கீரி சுற்றுலா கடற்கரை' இவ்வாறு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
-மன்னார் நகர சபையின் செயலாளர் எக்ஸ்.எல்.றெனால்ட் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டு வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்.
-இதன் போது மன்னார் நகர சபையின் முன்னால் உப தலைவர் , உறுப்பினர்கள், வட மாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், வடமாகாண முதலமைச்சரின் செயலாளர் திருமதி. வி.கேதீஸ்வரன், மன்னார் மாவட்ட பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எம்.ஏ.ஜே.துரம், வடமாகாண உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எம்.பற்றிக் டிறஞ்சன் உற்பட மன்னார் நகர சபையின் அலுவலர்கள், மாதர், கிராம அபிவிருத்திச் சங்க பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்-
(2-05-2017)
-முதலமைச்சரின் அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி கொடை நிதியில் 3.51 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட குறித்த 'கீரி சுற்றுலா கடற்கரை' இவ்வாறு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
-மன்னார் நகர சபையின் செயலாளர் எக்ஸ்.எல்.றெனால்ட் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டு வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்.
-இதன் போது மன்னார் நகர சபையின் முன்னால் உப தலைவர் , உறுப்பினர்கள், வட மாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், வடமாகாண முதலமைச்சரின் செயலாளர் திருமதி. வி.கேதீஸ்வரன், மன்னார் மாவட்ட பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எம்.ஏ.ஜே.துரம், வடமாகாண உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எம்.பற்றிக் டிறஞ்சன் உற்பட மன்னார் நகர சபையின் அலுவலர்கள், மாதர், கிராம அபிவிருத்திச் சங்க பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-மன்னார் நிருபர்-
(2-05-2017)
மன்னார் கீரி கடற்கரைப்பகுதியில் அமைக்கப்பட்ட 'கீரி சுற்றுலா கடற்கரை' வடமாகாண முதலமைச்சரினால் வைபவ ரீதியாக திறந்து வைப்பு.(படங்கள் )
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
May 02, 2017
 
        Rating: 
      
No comments:
Post a Comment