மன்னாரில் சிறிலங்கா கடற்படைப் படகு கவிழ்ந்து விபத்து – அதிகாரியைக் காணவில்லை
மன்னார்- அரிப்பு கடல் பகுதியில் சிறிலங்கா கடற்படைப் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கடற்படை அதிகாரி ஒருவர் காணாமல் போயுள்ளார்.
இந்தச் சம்பவம் கடந்த ஏப்ரல் 30ஆம் நாள்- ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றதாக, சிறிலங்கா கடற்படை பதில் பேச்சாளர் ருவான் பிரேமவீர தெரிவித்துள்ளார்.
எஸ்எல்என்எஸ் ரத்னதீப தளத்தில் இருந்து, லெப்.விஜேசிங்க என்ற அதிகாரியும், மூன்று கடற்படையினரும் சிறிய படகு ஒன்றில் சந்தேகத்துக்குரிய படகு ஒன்றைச் சோதனையிடச் சென்ற போதே, இந்த விபத்து இடம்பெற்றது.
கடற்படைப் படகு கவிழ்ந்த சம்பவத்தில் மூன்று கடற்படையினர் காயங்கள் ஏதுமின்றித் தப்பினர். எனினும், லெப். விஜேசிங்க இந்தச் சம்பவத்தில் காணாமல் போனார்.
விபத்து நடந்த பகுதியில் விமானப்படையின் துணையுடன் சிறிலங்கா கடற்படையினர், தேடுதல்களை நடத்தி வருகின்றனர். எனினும் அவர் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை.
மன்னாரில் சிறிலங்கா கடற்படைப் படகு கவிழ்ந்து விபத்து – அதிகாரியைக் காணவில்லை
Reviewed by NEWMANNAR
on
May 04, 2017
Rating:

No comments:
Post a Comment