பிரித்தானியா-மன்செஸ்டரில் தாக்குதல் மேற்கொண்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவின் மன்செஸ்டர் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல் மேற்கொண்ட நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 22 வயதான சல்மான் அபேடி (Salman Abedi ) பிரித்தானியாவில் பிறந்தவர் எனவும் இவரது பெற்றோர் லிபியாவில் இருந்து புலம்பெயர்ந்து வந்தவர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர் மான்செஸ்டர் நகரின் பல்வேறு முகவரிகளில் வசித்து வந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்தமையை அமெரிக்க பாதுகாப்பு துறை அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர்.
இதேவேளை இத்தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் 23 வயது மதிக்கத்தக்க ஒருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் தெற்கு மன்செஸ்டரில் உள்ள சோல்ட்டன் பகுதியில் வசித்து வருபவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு உள்ளூர் நேரப்படி 10.33 மணியளவில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் இறுதித் தகவல்களின்படி 22பேர் உயிரிழந்துள்ளதுடன், குறைந்தது 100பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலுக்கு தாங்கள்தான் காரணமான ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இத்தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் 23 வயது மதிக்கத்தக்க ஒருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் தெற்கு மன்செஸ்டரில் உள்ள சோல்ட்டன் பகுதியில் வசித்து வருபவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு உள்ளூர் நேரப்படி 10.33 மணியளவில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் இறுதித் தகவல்களின்படி 22பேர் உயிரிழந்துள்ளதுடன், குறைந்தது 100பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலுக்கு தாங்கள்தான் காரணமான ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினர் பொறுப்பேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியா-மன்செஸ்டரில் தாக்குதல் மேற்கொண்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
Reviewed by NEWMANNAR
on
May 24, 2017
Rating:

No comments:
Post a Comment