ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட இளைஞர்கள்:1000 பேருக்கு மத்தியில் 82 பிரம்படிகள்....
இந்தோனிசியாவில் இரண்டு இளைஞர்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதாக பொதுமக்கள் மத்தியில் வைத்து காவல்துறையினர் பிரம்படி கொடுத்துள்ளனர்.
இந்தோனேசியாவின் பாண்டா ஏசே நகரில் இந்தச் சம்பவம் நடந்தது. இஸ்லாமிய நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இருவருக்கும் தலா 82 பிரம்படிகள் கொடுக்கப்பட்டன. இந்தக் காட்சியை அங்கிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேரில் பார்த்தனர்.
பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நேரடியாகவும் ஒளிபரப்பினர். பிரம்படி கொடுப்பதற்காகவே ஒரு மேடை அமைக்கப்பட்டிருந்தது. பிரம்படிக்குப் பிறகு தண்டனை பெற்ற இருவரும் அவர்களது குடும்பங்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஓரினச் சேர்க்கைக்கு எதிரான சட்டம் கடந்த 2014-ஆம் ஆண்டு ஏசே மாகாணத்தில் கொண்டுவரப்பட்டது.
அதன்படி நிறைவேற்றப்பட்ட முதல் தண்டனை இதுவாகும். இந்த மாகாணத்தில் மட்டுமே ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது மதச் சட்டப்படி குற்றமாகக் கருதப்படுகிறது.
ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட இளைஞர்கள்:1000 பேருக்கு மத்தியில் 82 பிரம்படிகள்....
Reviewed by Author
on
May 24, 2017
Rating:

No comments:
Post a Comment