போராளிக்குழுக்களில் மக்கள் சேருவதற்கு வறுமையே காரணம்: ஐ.நா....
போர்ச்சூழல் மிக்க நாடுகளில் வறுமையில் வாடும் மக்களே ஆயுதமேந்திய போராளிக்குழுக்களில் அதிகம் சேருவதாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில் வறுமையும், பசியுமே எஞ்சியிருப்பதால்தான் மக்கள் வேறு நாடுகளுக்கு பெரிய அளவில் அகதிகளாகச் செல்வதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “உணவுப் பாதுகாப்பின்மை ஒவ்வொரு சதவீதம் அதிகரிக்கும் போதும் ஒரு நாட்டிலிருந்து வெளியேறும் மக்கள் தொகை விகிதம் 1.9 சதவிதமாக இருக்கிறது.
யேமன், சோமாலியா, தெற்கு சூடான், வடகிழக்கு நைஜீரியா ஆகிய நாடுகளில் இருந்து வரும் போர்ச்சூழல் காரணமாக சுமார் 2 கோடி மக்கள் வறுமையினால் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் உலகம் முழுதும் 10 கோடிக்கும் அதிகமானோர் போதிய ஊட்டச்சத்து இன்றி வாழ்கின்றனர்.
2015ஆம் ஆண்டு மட்டும் சுமார் 65.3 மில்லியன் மக்கள் தங்கள் சொந்த நாடுகளை விட்டு புலம்பெயர்ந்துள்ளனர்.
மேலும், சுமார் 16 லட்சம் அகதிகள் 2014-2016 ஆண்டு வரை ஐரோப்பிய ஒன்றியத்துக்குப் புலம்பெயர்ந்துள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்குறித்த அறிக்கைதான் வறுமை, பசி ஆகியவற்றுக்கும் புலம்பெயர்வதற்குமான தொடர்பை விளக்கும் ஒட்டுமொத்தமான முதல் அறிக்கை என்று கூறப்படுகிறது.

போராளிக்குழுக்களில் மக்கள் சேருவதற்கு வறுமையே காரணம்: ஐ.நா....
Reviewed by Author
on
May 08, 2017
Rating:
Reviewed by Author
on
May 08, 2017
Rating:

No comments:
Post a Comment