மன்.விளாத்திக்குளம் அ.த.க பாடசாலை ஆசிரியர்களுக்கான தங்குமிட விடுதி அடிக்கல் நாட்டுவிழா...
மன்னார் மடு வலயத்துக்குட்பட்ட விளாத்திக்குளம் அ.த.க பாடசாலைக்கு சமூக சேவைகள் நல்லிணக்க அமைச்சின் நிதியின்கீழ் ஆசிரியர்களுக்கான தங்குமிட விடுதி நிர்மானிப்பதற்காக இன்று 29-05-2017 காலை 9 மணிக்கு அடிக்கல் நாட்டுவிழா இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ.இ.சாள்ஸ் நிர்மலநாதன், மடு வலயக்கல்வி பணிப்பளர் திரு.குயின்டஸ், அதிபர், ஆசிரியர், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.
பல வருடங்களாக இப்பிரதேசத்தில் உள்ள பாடசாலைக்கு தொலைவிலிருந்து வருகை தரும் ஆசிரியர்கள் தங்குமிட வசதியின்றி, கஸ்டங்களுக்கு மத்தியில் இப்பிரதேசத்துக்கு வருகை தந்து கற்பித்தல் பணியை மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மன்.விளாத்திக்குளம் அ.த.க பாடசாலை ஆசிரியர்களுக்கான தங்குமிட விடுதி அடிக்கல் நாட்டுவிழா...
Reviewed by Author
on
May 30, 2017
Rating:

No comments:
Post a Comment