இராணுவ அச்சுறுத்தல்களால் கல்விச் செயற்பாடு பாதிப்பு! சிறீதரன் எம்.பி குற்றச்சாட்டு...
வட- கிழக்கிலே வாழ்கின்ற எங்கள் பிள்ளைகள் தற்போதைய காலகட்டத்திலும் பல்வேறுபட்ட நெருக்கீடுகளுக்கு மத்தியில்தான் தமது கல்வியைத் தொடர வேண்டிய நிலை காணப்படுகின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்
சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
கிளிநொச்சி பளை கல்வி நிலையம் ஒன்றின் ஏழாம் ஆண்டு நிறைவு விழாவும் மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் நேற்றைய தினம் காலை 11.00 மணிக்கு கல்வி நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தனது பிரதம விருந்தினர் உரையின் போது மேற்படி கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.
அவர் தனது உரையில் மேலும் கூறுகையில், தமிழர்களாகிய நாங்கள் கல்வியிலே மிகவும் தரம் வாய்ந்தவர்களாக விளங்கியுள்ளோம். அதனால்தான் எங்கள் மீது தரப்படுத்தல் என்னும் சட்டம் கொண்டு வரப்பட்டது. எங்களைத் தரப்படுத்திக் கீழே அமுக்க முற்பட்டுள்ளார்கள்.
இப்பொழுது நாம் கல்வியில் மாகாணத்தில் கடைசியாக நிற்கிறோம், மாவட்டத்திலே கடைசியாக நிற்கிறோம் என்றால் எங்களிடத்திலே ஏதோ குறைபாடு உள்ளது. எங்கள் மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்ட யுத்தம் எங்கள் மகிழ்ச்சியைக் காவு கொண்டுள்ளது. அந்த யுத்தத்தால் எங்கள் குடும்ப உறவு கள் அழிக்கப்பட்டுள்ளார்கள். எங்கள் சொத்துக்கள் எல்லாமே அழிக்கப்பட்டுள்ளன.
எங்களுடைய நிலங்களிலே நாம் இன்னும் நிம்மதியாக வாழமுடியாத நிலை தொடர்கி ன்றது. எங்களைச் சுற்றி இப்போதும் இராணுவத்தினர் ஆயுதங்களோடும் இராணுவச் சீருடைகளுடனும் சிவில் உடைகளுடனும் எங்களை அடக்கி ஆள்வதற்காகக் கண்காணித்து வருகின்றார்கள், அச்சுறுத்தும் பாணியில் நடந்துகொள்கின்றார்கள்.
ஆயுதங்களை ஏந்திய இராணுவச் சீருடை அணிந்தவர்களை நாம் எந்நேரமும் எமது பகுதிகள் அனைத்திலும் பார்த்துக்கொண்டு தான் உள்ளோம். நாம் வாழ்கின்ற பகுதிகள் எங்கு பார்த்தாலும் இராணுவத்தினரது ஆதிக்கம்தான் காணப்படுகின்றது.
ஆகவே எமது மாணவர்களின் கல்வி ஒரு அச்சுறுத் தலுக்கு மத்தியிலேயே நடைபெறுகி ன்றது. எமது பிள் ளைகள் அச்சசூழ் நிலைகளுடன் நெருக்கடிகளுக்குள்ளாலும்தான் கல்வியைத் தொடர வேண்டிய நிலை காணப்ப டுகின்றது.இதனால்தான் கல்வியிலே சில வேளைகளில் சில பின்னடைவுகளைச் சந்திக்க வேண்டிய நிலைக்குள் தள்ளப்படுகின்றோம் என சிறீதரன் எம்.பி தனது உரையில் குறிப்பிட்டார்.
இராணுவ அச்சுறுத்தல்களால் கல்விச் செயற்பாடு பாதிப்பு! சிறீதரன் எம்.பி குற்றச்சாட்டு...
Reviewed by Author
on
May 30, 2017
Rating:

No comments:
Post a Comment