பூநகரியில் குடிநீருக்கான தட்டுப்பாடு: மக்கள் பாதிப்பு....
கிளிநொச்சி - பூநகரி பிரதேசத்தில் பல்வேறு பகுதியில் தொடர்ந்தும் குடிநீருக்கான தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியில் வாழும் மக்கள் தங்களுக்கான குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் அன்றாடம் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
கிளிநொச்சி மாவட்டத்தின் அதிகூடிய குடிநீர் நெருக்கடி நிலவும் பகுதியாக பூநகரி பிரதேசம் காணப்படுகின்றது.
இந்த நிலையில், பூநகரி பிரதேசத்தில் உள்ள 19 கிராம அலுவலர் பிரிவுகளில் மீள் குடியேறியுள்ள 7335 குடும்பங்களில் 10 கிராம அலுவலர் பிரிவுகளில் வாழும் சுமார் 3112 குடும்பங்களுக்கு வருடம் முழுவதும் குடிநீர் விநியோகிக்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றது.
அத்துடன், ஒன்பது பாடசாலைகளுக்கும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகின்றதுடன், மறவன்குறிச்சி, கொல்லக்குறிச்சி, இராமலிங்கம் வீதி, பரமன்கிராய் கறுக்காய் தீவு, செட்டியகுறிச்சி, ஞானிமடம், சித்தங்கேணி, நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், இந்த பகுதிகளில் போதிய குடிநீர் வசதிகள் கிடைப்பதில்லை எனவும் இதனால் தமக்கான குடிநீர் பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்வதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பூநகரியில் குடிநீருக்கான தட்டுப்பாடு: மக்கள் பாதிப்பு....
Reviewed by Author
on
May 24, 2017
Rating:
Reviewed by Author
on
May 24, 2017
Rating:


No comments:
Post a Comment