உயிரிழந்தோரின் எண்ணிக்கை 130-ஆக உயர்வு வங்காளதேசத்தில் மழை, நிலச்சரிவில்
வங்காளதேசத்தில் பருவமழை காரணமாக பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 130-ஆக உயர்ந்துள்ளது.
வங்காளதேசத்தில் பருவமழை காரணமாக பெய்து வரும் கனமழையால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ளம் காரணமாக நிலச்சரிவும் ஏற்பட்டது. மழை, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளனவர்களின் எண்ணிக்கை 130-ஆக உயர்ந்துள்ளது.
நாட்டிலேயே அதிக சேதத்திற்குள்ளான ரங்கமாதி மாவட்டத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிலும் இந்திய எல்லையில் அமைந்துள்ள தொலைதூர மலை மாவட்ட பகுதிகளில் வசித்து வந்த பலரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அந்த பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க சென்ற ராணுவ வீரர்கள் நான்கு பேரும் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
மக்கள் உறங்கிக் கொண்டிருந்த இரவு நேரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பலர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் பல குழந்தைகளும் சிக்கியிருக்கலாம் என அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 130 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பலர் மண்ணில் புதைந்துள்ளதாகவும் வங்கதேச ஊடங்கங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 100-க்கும் மேற்பட்டோர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பல வீடுகளில் சுற்றுப்புற சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது இதனால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
உயிரிழந்தோரின் எண்ணிக்கை 130-ஆக உயர்வு வங்காளதேசத்தில் மழை, நிலச்சரிவில்
Reviewed by Author
on
June 14, 2017
Rating:

No comments:
Post a Comment