லண்டனுக்கு அச்சுறுத்தல்? டன் கணக்கில் வெடிகுண்டுகளுடன் மூழ்கிய கப்பல்!
டன் கணக்கில் வெடிகுண்டுகளுடன் கென்ட் கடற்பகுதியில் மூழ்கிய கப்பலால் எந்த நேரமும் லண்டனுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என புதிதாக வெளியான ஆவணப்படம் ஒன்று எச்சரித்துள்ளது.
இரண்டாம் உலக யுத்த காலத்தில் 1400 டன் வெடிப்பொருட்களுடன் கென்ட் கடற்பகுதியில் கப்பல் ஒன்று மூழ்கியுள்ளது.
குறித்த கப்பலில் இருக்கும் வெடிகுண்டுகள் இன்னமும் ஆபத்தான நிலையில் எந்த நேரமும் வெடிக்கும் வகையில் இருப்பதாக, அது தொடர்பில் ஆவணப்படம் ஒன்றை எடுத்துள்ள குழுவினர் ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளனர்.
SS Richard Montgomery என்றறியப்படும் குறித்த கப்பலானது 1944 ஆம் ஆண்டு கென்ட் கடற்பகுதியில் மூழ்கியுள்ளது. இதன் பாகங்கள் கடலில் இருந்து வெளியே துருத்திய நிலையில் இப்போதும் காணப்படுகிறது.
கப்பல் மூழ்கிய குறித்த பகுதியை பிரித்தானிய அரசு மிகுந்த எச்சரிக்கயுடன் பாதுகாத்து வருகிறது. மட்டுமின்றி குறித்த கப்பலை 24 மணி நேரமும் கண்காணித்த வண்ணமே உள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

லண்டனுக்கு அச்சுறுத்தல்? டன் கணக்கில் வெடிகுண்டுகளுடன் மூழ்கிய கப்பல்!
Reviewed by Author
on
June 13, 2017
Rating:

No comments:
Post a Comment