அண்மைய செய்திகள்

recent
-

20 மில்லியன் பேரம்.. கழுத்தை நெரித்து கொலை! வித்தியா கொலை வழக்கில் வெளிவரும் பகீர் தகவல்


புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ட்ரயல் அட் பார் தீர்ப்பாயத்தின் அடிப்படையில் விசாரணைகள் இன்று யாழ். மேல் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், பதில் சட்டமா அதிபர் டப்புள்ள டி லிவேரா இன்றைய அமர்வில் கலந்து கொண்டு ஆரம்ப உரையாற்றியிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் கடந்த ஒரு ஆண்டுடாக புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளை அடிப்படையாக கொண்டு பதில் சட்டமா அதிபர் உரையாற்றியிருந்தார்.

அவரது உரையில், "நீதியை நிலை நாட்ட வேண்டும். சகல மக்களுக்கும் செய்தியை சொல்லும் வகையில், தீர்ப்பு அமைய வேண்டும்.

இந்த சம்பவமானது கூட்டு வன்புணர்வு அல்லது கூட்டு கொலை கிடையாது. இது ஒரு நன்கு திட்டமிடப்பட்ட சர்வதேச அளவில் தயார்ப்படுத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்ட குற்றமாகும்.
இந்த சம்பவம் நாட்டின் நற்பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சுவிஸ் குமார், சர்வதேச ரீதியில் பலகோடி ரூபா பெறுமதியான ஒப்பந்தம் ஊடாக இந்த சம்பவத்தை மேற்கொண்டுள்ளார்.

பெண் பிள்ளையை கூட்டாக வன்புணர்வுக்கு உட்படுத்தியதன் உடாக அந்த பணம் கைமாற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை 5வது மற்றும் 6வது சந்தேகநபர்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.

அதனை தொகுப்பாக விற்பனை செய்துள்ளனர். கையடக்க தொலைபேசியில் எடுக்கப்பட்ட வீடியோ அழிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தன்னிடம் விசாரணை மேற்கொண்ட அதிகாரியிடம் 20 மில்லியன் ரூபா பணம் தருவதாக கூறி சுவிஸ் குமார் பேரம் பேசியுள்ளார்.

மேலும், வித்தியாவின் கழுத்து நெருக்கப்பட்டு, மூச்சு குழாய் அடைக்கப்பட்டு மரணம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், 2ம்,3ம், 5ம், மற்றும் 6ம் சந்தேகநபர்கள் வித்தியாவை வன்புணர்வுக்கு உட்டுபடுத்தியுள்ளதாக" பதில் சட்டமா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

20 மில்லியன் பேரம்.. கழுத்தை நெரித்து கொலை! வித்தியா கொலை வழக்கில் வெளிவரும் பகீர் தகவல் Reviewed by Author on June 29, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.