மன்னாரில் தேவையுடைய 3 பயனாளிகளுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைப்பு...
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியில் இருந்து மன்னார் மாவட்டத்தை சேர்ந்த தேவையுடைய பயனாளிகளுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கும் நிகழ்வு 31-05-2017 புதன் மாலை 2 மணியளவில் மன்னார் மாவட்டத்தில் உள்ள அமைச்சரது உப அலுவலகத்தில் நடைபெற்றது.
அந்த வகையில் மன்னார் பெரிய பண்டிவிரிச்சானை சொந்த இடமாகவும் மன்னார் டிலாசால் விடுதியில் தங்கியிருந்து உயர்தரக்கல்வியை கற்றுவருகின்ற கடந்த யுத்தத்தில் தனது பெற்றோரை இழந்த மாணவர் ஒருவருக்கும், அதேபோல பாலையடி புதுக்குளம் பகுதியை சேர்ந்த இந்தியாவிற்கு அகதிகளாக சென்று தற்போது மீளக்குடியேறிய குடும்பஸ்தர் ஒருவருக்கும், மன்னார் எமில்நகரைச் சேர்ந்த தனது தந்தையை இழந்த பாடசாலை செல்லும் மாணவர் ஒருவருக்குமாக அவர்களது தேவைகளையும் ஆராய்ந்து தனது நிதியில் இருந்து மூன்று துவிச்சக்கரவண்டிகளை அமைச்சர் வழங்கிவைத்தார்.
மன்னாரில் தேவையுடைய 3 பயனாளிகளுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைப்பு...
Reviewed by Author
on
June 02, 2017
Rating:

No comments:
Post a Comment