தடை செய்யப்பட்ட கடற்பகுதியில் மீன் பிடியில் ஈடுப்பட்ட 40 மீனவர்கள் கைது
திருகோணமலையில் தடை செய்யப்பட்ட கடற்பகுதியில் மீன் பிடியில் ஈடுப்பட்ட 40 மீனவர்களை கடற்படையினர் கைது செய்யதுள்ளனர்.
குறித்த மீனவர்களிடம் இருந்து 5 டிங்கி படகுகளும், 5 இயந்திரங்களும், 5 வலைகளும் கைப்பற்றப்பட்டன.
அத்துடன், கிண்ணியா மூதூர் பிரதேசத்தை சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்கள் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
மேலும், சம்பூர், கெங்கை, உப்பாறு போன்ற பிரதேச கரையில் சுமார் 3 கிலோ மீற்றர் கடலுக்குள் மீன்பிடியில் ஈடுப்பட்டதாக இந்த மீனவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட கடற்பகுதியில் மீன் பிடியில் ஈடுப்பட்ட 40 மீனவர்கள் கைது
Reviewed by Author
on
June 18, 2017
Rating:

No comments:
Post a Comment