ஆறு மாத காலத்திற்குள் 426 விவசாயிகள் தற்கொலை....
இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் கடந்த ஆறு மாதங்களில் 426 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மராட்டிய மாநிலம் மராத்வாடா மாவட்டத்தில் பருவநிலை மாறுபாடு, வேளாண்மை உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பு, போதிய விளைச்சல் இல்லாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
மராத்வாடா பிரதேசத்தின் எட்டு மாவட்டங்களில் இந்த விவசாயிகளின் மரண எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
தற்கொலை செய்து கொண்ட 426 விவசாயிகளில், 257 குடும்பங்களுக்கு மாத்திரமே இதுவரையில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆறு மாத காலத்திற்குள் 426 விவசாயிகள் தற்கொலை....
Reviewed by Author
on
June 24, 2017
Rating:

No comments:
Post a Comment