வாக்குறுதிகள் வழங்கிய சம்பந்தன் திரும்பிப் பார்க்கவில்லை..
முல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்களை எந்த ஒரு அரசியல் வாதிகளும் திரும்பிப் பார்க்கவில்லை எனவும் இந்நிலையில் நிலங்களுக்கான போராட்டம் தொடர்வதாகவும் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 117 நாட்களுக்கு மேலாக முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் நில மீட்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
எதிர்கட்சித் தலைவர் சம்பந்தன் ஒரு பகுதி காணிகள் விடுவிக்கப்படும் என்றும் எழுபது ஏக்கர் காணியை தவணை அடிப்படையில் விடுவிப்பதாகவும் கடந்த மாதம் 18ஆம் திகதி நேரடியாக வந்து கூறியிருந்தார்.
ஆனால், இன்று வரையும் எந்த ஒரு தீர்வுகளும் எட்டப்படவில்லை. வாக்குறுதிகள் வழங்கிய அரசியல்வாதிகளும் திரும்பிப்பார்க்காத நிலையில் வீதியில் இருந்து போராடி வருகின்றோம் எனவும் கேப்பாப்புலவு மக்கள் கூறியுள்ளனர்.
எந்த ஒரு அரசியல் வாதிகளும் இதற்காக நடவடிக்கை எடுப்பது போன்று தெரியவில்லை. இதற்கான முடிவு தருவதாகவும் தெரியவில்லை.
ஆனால் இந்த நிலை நீடிக்குமாக இருந்தால் மிக விரைவில் வித்தியாசமான முறையில் எமது போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
வாக்குறுதிகள் வழங்கிய சம்பந்தன் திரும்பிப் பார்க்கவில்லை..
Reviewed by Author
on
June 27, 2017
Rating:

No comments:
Post a Comment