கண்ணீருடன் கோரிக்கை விடுத்த சுகாதாரத் தொண்டர்கள்....
சுகாதாரத் தொண்டர்களுக்கு நியமனம் வழங்கவில்லை என வடமாகாணத்தில் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் அதற்கான ஆதரவினை கிளிநொச்சி சுகாதார தொண்டர்கள் வழங்கி வந்தனர்.
இந்த நிலையில் இன்று பிற்பகல் கிளிநொச்சி சுகாதார தொண்டர்கள் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார தொண்டர்கள் இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
நாங்கள் நாளைய தினம் வடமாகாண ஆளுனரை சந்திக்க உள்ளோம். அவர் எமக்கு சுமூகமான பதிலை அளிக்காவிட்டால் எங்களது கவனயீர்ப்புப் போராட்டம் தீர்வு கிடைக்கும் வரை தொடரும்.
தாங்கள் கடந்த 1992, 1997 ஆண்டுகளில் இருந்து பலதரப்பட்ட கஷ்டங்களின் மத்தியில் தொண்டர்களாக பணிபுரிவதாகவும் தங்களுக்கான நியமனங்களை சம்பந்தப்பட்டவர்கள் பெற்றுத் தாருங்கள் எனக் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கண்ணீருடன் கோரிக்கை விடுத்த சுகாதாரத் தொண்டர்கள்....
Reviewed by Author
on
June 28, 2017
Rating:

No comments:
Post a Comment