மன்னார் பொதுவைத்தியசாலைக்கு முன்பாக முச்சக்கரவண்டி விபத்து.....தொடரும் தொடர் விபத்துக்கள் காரணம்
சுற்றுமுன் முச்சக்ககரவண்டியானது மன்னார் பொதுவைத்தியசாலை சந்தியில் விபத்துக்குள்ளாகியது வேகமாக வந்த முச்சக்கரவண்டியானது முன்னால் குறுக்காக நாய் பாய்ந்ததால் சடுதியாக பிறேக்கடித்து திருப்பும் போது நீர்ப்பாசன நிலத்தடி குழாயின் மேற்புறத்தட்டு மூடி பிரதான பாதையில் சரிக்கரவாசியும் வீதித்தடைபோலவும் இருக்கின்றது.
இதன்மீது ஏறி அருகில் நின்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டியுடன் உராயப்பட்டு சுமார் மூன்றுதடவை முச்சக்கரவண்டியானது பிரண்டு உருண்டுள்ளது.
முச்சக்கரவண்டியினுள் இருந்த மூன்று பெண்களும் தெய்வாதீனமாக உயிரதப்பியுள்ளனர்.
ஒருவருக்கு ஒரு கை முறிந்துள்ள நிலையில் மற்ற இருபெண்களுக்கும் பலமான அடியுடன் சிறுகாயங்களும் உராய்வுகளும் ஏற்பட்டுள்ளது.
- முதலாவது வேகமான ஓட்டம்
- பிரதான பாதையில் உள்ள நீர்ப்பான குழாயின் மேற்புறம்
- வீதியின் ஒரு பகுதியான வலதுபக்கத்தில் மிகவும் சரிவாக பள்ளமாக இருப்பதாலும்
- வீதி அருகில் தெருக்கடைகள் இருப்பதாலும்
இப்பகுதியில் ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று விபத்துக்கள் நடந்த வண்ணம் தான் உள்ளது. அது சிறிய விபத்தாக இருக்கும் போது எவரும் கண்டுகொள்வதில்லை பெரிய விபத்து என்றால் அதுவும் உயிர்ப்பலி என்றதும் ஊடகங்களும் ஓடிவருகின்றன…..
மக்கள் பாதிப்பு …
இநதப்பிரச்சினைக்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் RDA-வீதி அபிவிருத்தி சபை தீர்வினை முன்வைக்கவேண்டும்.
மக்கள் பாதிப்பு …
இநதப்பிரச்சினைக்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் RDA-வீதி அபிவிருத்தி சபை தீர்வினை முன்வைக்கவேண்டும்.
மன்னார் பொதுவைத்தியசாலைக்கு முன்பாக முச்சக்கரவண்டி விபத்து.....தொடரும் தொடர் விபத்துக்கள் காரணம்
Reviewed by Author
on
June 14, 2017
Rating:

No comments:
Post a Comment