நான் செல்லும் பாதை சரியானதே ; உங்கள் ஆதரவு இருக்கும் வரை என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது ; சி.வி.
மக்களின் ஆதரவைக்கொண்டு தொடர்ந்து வட. மாகாணத்தை ஆட்சி செய்வேன் என வட. மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நல்லூர் ஆலய முன்றலிலிருந்து முதல்வர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே முதல்வர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், எனக்கு பின்னால் நீங்கள் இருப்பதை பார்க்கும்போது நான் செல்லும் பாதை சரி என்று எனக்கு தோன்றுகின்றது.
உங்கள் நலன் சார்ந்த அனைத்து நடவடிக்கைகளையும் நான் எடுப்பேன் என்பதை இங்கு உறுதிபட தெரிவிக்கின்றேன். உங்கள் ஆதரவு இருக்கும் வரை என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்றார்.
நான் செல்லும் பாதை சரியானதே ; உங்கள் ஆதரவு இருக்கும் வரை என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது ; சி.வி.
Reviewed by NEWMANNAR
on
June 17, 2017
Rating:

No comments:
Post a Comment