பூமிக்குள் புதைந்திருந்த அதிசயம் கண்டுபிடிப்பு.....
எத்தியோப்பியாவில் பூமிக்குள் புதைந்த நகரத்தை தொல்பொருள் நிபுணர்களால் கண்டுபிடித்துள்ளனர்.
அந்த நகரத்தின் பெயர் ஹர்லா. இது செங்கடல் பகுதியில் இருந்து 120 கிலோமீற்றர் தூரத்திலும், கட்டிஸ் அபாபா நகரில் இருந்து 300 கிலோமீற்றர் தொலைவிலுமுள்ளது.
தோண்டப்பட்ட இந்த நகரத்தில் 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மசூதி உள்ளது. மேலும் கண்ணாடி பீங்கான் உடைந்த பாத்திரங்கள், பாறை துகள்கள் மடாகல்கர், மாலைதீவுகள், யெமன் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மண்பாண்டங்கள் உள்ளிட்டவையும் கிடைத்துள்ளன.
இதன் மூலம் இந்த நகரம் எத்தியோப்பியாவின் வர்த்தக மையமாக திகழ்ந்து இருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

பூமிக்குள் புதைந்திருந்த அதிசயம் கண்டுபிடிப்பு.....
Reviewed by Author
on
June 20, 2017
Rating:

No comments:
Post a Comment