அண்மைய செய்திகள்

recent
-

கஞ்சா எண்ணெய்யால் உயிர் பிழைத்த சிறுமி: மருத்துவ துறையில் ஓர் மைல்கல்


அமெரிக்காவில் கொடிய நோயால் உயிருக்கு போராடிய சிறுமி ஒருவருக்கு கஞ்சா எண்ணெய் மூலம் சிகிச்சை அளித்ததை தொடர்ந்து அவர் உயிர் பிழைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரிசோனா மாகாணத்தில் உள்ள டஸ்கான் நகரில் Annalise Lujan(12) என்ற சிறுமி வசித்து வருகிறார்.

பள்ளிக்கு சென்ற வந்த சிறுமி கடந்த சில மாதங்களாக சோர்வுற்று காணப்பட்டுள்ளார். மேலும், கை-கால்களை இழுத்துக்கொள்ளும் வலிப்பு நோயும் அவரை தாக்கியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் இந்த வினோதமான நோயால் சிறுமி உயிருக்கு ஆபத்து இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.


பின்னர், சிறுமிக்கு பல்வேறு கட்டங்களாக சிகிச்சை அளித்த நிலையிலும் அவரது நோய் குணமாகவில்லை.

நோயை குணப்படுத்த முடியவில்லை என்றால் அது சிறுமியின் மூளையை பாதிக்கும் எனக் கருதி அவரை செயற்கையான கோமா நிலையில் மருத்துவர்கள் வைத்துள்ளனர்.

இந்நிலையில், சிறுமியின் தாயார் அளித்த ஆலோசனைகளின் அடிப்படையில் சிறுமிக்கு cannabis oil எனப்படும் எண்ணெய் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்துள்ளது.

இச்சிகிச்சை சிறுமிக்கு பலனை அளித்துள்ளது. தொடர்ச்சியாக மூன்று முறை அளிக்கப்பட்ட சிகிச்சையின் பலனாக கடந்த மே மாதம் 8-ம் திகதி சிறுமி பூரணமாக குணமாகியுள்ளார்.

மருத்துவ துறையில் முதல் முறையாக இந்த எண்ணெய் பயன்படுத்தப்பட்ட நோய் குணமாகியுள்ளதால் இது குறித்து மேலும் ஆய்வு செய்து வருவதாக மருத்துவர்கள் உற்சாகமாக தெரிவித்துள்ளனர்.

கஞ்சா எண்ணெய்யால் உயிர் பிழைத்த சிறுமி: மருத்துவ துறையில் ஓர் மைல்கல் Reviewed by Author on June 03, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.