பதவியேற்பிற்காக காத்திருந்த பிரதமர்: கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்ட மனைவி....
லெசோதோ நாட்டில் அண்மையில் தெரிவு செய்யப்பட்ட பிரதமரின் மனைவி மர்ம நபர்களால் கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள லெசோதோ நகரில் இம்மாத தொடக்கத்தில் பிரதமர் தேர்தல் நடைபெற்றுள்ளது.
லெசோதோ நாட்டில் அதிகாரத்தை கைப்பற்ற அடிக்கடி கலவரம் நடைபெற்று வருவதால் தேர்தல் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.
இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற தேர்தலில் Thomas Thabane என்பவர் வெற்றி பெற்றுள்ளார்.
வெள்ளிக்கிழமையான இன்று இவர் பிரதமர் பதவியை ஏற்க உள்ள நிலையில் நேற்று கொடூரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
பிரதமரின் மனைவியான Lipolelo Thabane(58) என்பவர் நேற்று பெண் ஒருவருடன் காரில் பயணம் செய்துள்ளார்.
அப்போது, காரை வழிமறைத்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
பிரதமர் மற்றும் அவருடைய மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்ததால் 2012-ம் ஆண்டு விவாகரத்து கோரி தற்போது வரை இருவரும் தனியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
மேலும், பிரதமரின் மனைவி என்றும் லெசோதோ நாட்டின் முதல் குடிமகள் எனவும் தன்னை அங்கீகரிக்க வேண்டும் என பிரதமரின் மனைவி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதுமட்டுமில்லாமல், சில தினங்களுக்கு முன்னதாக பிரதமரின் மனைவியின் வீட்டை சில மர்ம நபர்கள் தாக்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மனைவி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது என பிரதமர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும், இச்சம்பவத்திற்கு பின்னணியில் உள்ளவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என பிரதமர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.
பதவியேற்பிற்காக காத்திருந்த பிரதமர்: கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்ட மனைவி....
Reviewed by Author
on
June 16, 2017
Rating:

No comments:
Post a Comment