மன்னார் சித்திவிநாயகர் இந்துக்கல்லூரியில் அய்யன் திரு வள்ளுவர் திருவுருவச்சிலை...படங்கள் இணைப்பு
மன்னார் சித்திவிநாயகர் இந்துக்கல்லூரியில் அமைக்கப்பட்ட அய்யன் திரு
வள்ளுவர் திருவுருவச்சிலை இன்று 16-06-2017 காலை வைபவ ரீதியாக திறந்து
வைக்கப்பட்டுள்ளது.
அய்யன் திருவள்ளுவர் சிலையானது 08 அடி உயரம் கொண்டதாய் அமைந்துள்ளது அத்தோடு இலங்கையின் பதினாறு இடங்களில் நிறுவப்பட்டுள்ளது உத்தியோகபூர்வமாக இன்று மன்னார் மாவட்டத்தின் தேசிய பாடசாலையான சித்திவிநாயகர் பாடசாலையில் திறந்து வைக்கப்பட்டது.
முதல் கட்டமாக எட்டு இடங்களில் வைபரீதியாக திறந்துவைக்கும் முகமாக நேற்று புத்தளத்திலும் இன்று மன்னாரிலும் மாலை முல்லைத்தீவிலும் நாளை கிளிநொச்சியிலும் யாழ்ப்பாணத்திலும் பின்பு கொழும்பிலுமாக திறந்து வைக்கப்படவுள்ளது
இந்தியாவின் தமிழ் நாட்டில் உள்ள தொழிலதிபர் வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்க தலைவர் வி.ஜி.சந்தோசம் அவரின் நன்கொடையில் அமைக்கப்பட்ட குறித்த திரு உருவ சிலையை உலகத் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் சந்தோசம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் டீ.என்.வள்ளி நாயகம் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
பாடசாலையின் அதிபர் ரி.தனேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் வி.ஜி.பி. உலகத் தமிழ்ச்சங்க 30 பிரதிநிதிகள் தந்தி ரீவி ஊடகத்தினர் மற்றும் இந்துசமய அமைப்புக்களின் பிரதிநிதிகள் பாடசாலையின் மாணவர்கள், ஆசிரியர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by Author
on
June 16, 2017
Rating:

No comments:
Post a Comment