தமிழ்த்தேசிய அரசியலை முன்னிறுத்தும் என் மக்கள் பணி வழமைபோல் தொடரும். மறுப்பறிக்கையில் ரவிகரன்.
தமிழ்த்தேசிய அரசியலை முன்னிறுத்தும் தனது மக்கள் பணி இன்று போல் என்றும் தொடரும் எனவும் தன்னைப்பற்றி ஊடகங்கள் ஒன்றிரண்டில் வெளிவரும் மோசடி தொடர்பான செய்தியானது முற்றிலும் உண்மைக்குப்புறம்பானது எனவும் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
முல்லைத்தீவில் நிகழும் அதிகாரமுறைகேடுகள் தொடர்பிலும் தமிழ்த்தேசிய அரசியலை முன்னிறுத்தி முழுக்கமுழுக்க மக்கள் பணியாற்றுவது தொடர்பிலும் தன்னுடன் நேருக்குநேர் முகங்கொடுக்க இயலாதவர்களே இவ்வாறு போலியான கருத்துக்களை முறைப்பாடாக முன்வைத்துள்ளனர்.
கையொப்பமிட்டவர்களில் எவரும் முல்லைத்தீவு கடற்றொழில் சமாசத்துடன் எதுவித தொடர்பும் அற்றவர்கள். மக்கள் மத்தியிலான எனது நற்பெயர்க்கு களங்கம் விளைவிக்கும் வகையில் மேற்கொண்ட செயல் தான் இது.
எதுவித கூடுதல் ஆய்வுமின்றி பதினால்வரின் அவதூற்றுக்கருத்தை முல்லை மக்கள் என்ற பொது அடையாளத்துடனான செய்தியாகப்பதிவேற்றிய “தமிழ்வின்“ உள்ளிட்ட சில ஊடகங்களுக்கு தனது ஆழ்ந்த வருத்தங்களை தெரிவிப்பதாக அவர் தெரிவித்தார்.
தமிழ்த்தேசிய அரசியலை முன்னிறுத்திய தனது மக்கள் பணி வழமை போல் தொடரும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழ்த்தேசிய அரசியலை முன்னிறுத்தும் என் மக்கள் பணி வழமைபோல் தொடரும். மறுப்பறிக்கையில் ரவிகரன்.
Reviewed by NEWMANNAR
on
June 24, 2017
Rating:

No comments:
Post a Comment