அவசர அவசரமாக கொழும்பு சென்றார் வடக்கு ஆளுநர்!
வட மாகாண சபையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தில் நடுவே ஆளுநர் ரெஜினோல்ட் கூரே அவசர அவசரமாக கொழும்புக்கு சென்றுள்ளார்.
முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் பதவி விலக வேண்டுமென 22 பேர் கையொப்பமிட்டு நம்பிக்கையில்லா தீர்மானமொன்றை ஆளுநரிடம் கையளித்துள்ளனர்.
இதனையடுத்து ஆளுநர், வடமாகாணசபையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதலமைச்சருக்கு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சிவாஜிலிங்கம் தலைமையிலான 15 பேர் கொண்ட மற்றுமொரு குழுவினர் முதலமைச்சருக்கு ஆதரவாக நேற்று முன்தினம் நம்பிக்கைத் தீர்மானமொன்றை கையளித்துள்ள நிலையிலேயே அவை தொடர்பில் சட்ட ஆலோசனைப் பெறுவதற்காகவே ஆளுநர் இன்று அவசரமாக கொழும்பு வந்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, வடமாகாண சபையில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் வார இறுதி நாட்களில் ஆளுநர் கொழும்பிலுள்ள அரச தரப்பு அதிகாரிகளுடன் விரிவாக ஆராய்ந்ததன் பின்னர் எதிர்வரும் திங்கட்கிழமையன்று உத்தியோகப்பூர்வ நடவடிக்கை எடுப்பாரென்றும் ஆளுநர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவசர அவசரமாக கொழும்பு சென்றார் வடக்கு ஆளுநர்!
Reviewed by Author
on
June 17, 2017
Rating:

No comments:
Post a Comment