தாய்லாந்து அரச குடும்பத்தை விமர்சித்த நபர்: ராணுவ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
தாய்லாந்து அரச குடும்பத்தை விமர்சித்து சமூக வலைதளத்தில் தொடர் பதிவுகள் எழுதிய நபருக்கு 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தாய்லாந்தில் சியாங் மாய் நகரைச் சேர்ந்தவர் விசாய். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பரில் தாய்லாந்து அரச குடும்பத்தை விமர்சித்து பேஸ்புக்கில் தொடர்ந்து பதிவுகள் எழுதி வந்துள்ளார்.
இதன் காரணமாக அரச குடும்பத்தை அவமதித்த குற்றத்திற்காக லெஸ் மெஜஸ்தி என்ற சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
லெஸ் மெஜஸ்தி சட்டத்தின்படி அரச குடும்பத்தினரை அவமரியாதை செய்வதோ, அவமானப்படுத்துவதோ அல்லது மிரட்டுவதோ, அந்த நாட்டு குற்றவியல் சட்டத்தில் 15 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கக்கூடிய குற்றமாகும்.
இதனிடையே கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற ராணுவ புரட்சிக்கு பின்னர், குறித்த பிரிவுகளின் கீழ் தொடுக்கப்படும் வழக்குகளின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது.
அங்குள்ள ராணுவமானது இத்தகைய வழக்குகளை சிவில் நீதிமன்றத்திற்கு பதிலாக ராணுவ நீதிமன்றத்திற்கு அனுப்புவது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது.
சிவில் நீதிமன்றத்தினை விட இரு மடங்கு தண்டனைகளை ராணுவ நீதிமன்றம் விதிப்பது வழமாக கொண்டுள்ளது.
தற்போது இந்த வழக்கை விசாரித்த அந்த நாட்டு ராணுவ நீதிமன்றம், 10 குற்றச்சாட்டுகளை அவர் மீது சுமத்தி, அவருக்கு முதலில் 60 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
இதனிடையே தமது குற்றத்தை ஒப்புக் கொண்டு விசாய் மன்னிப்பு கோரியதால் அவரது தண்டனை 35 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.
குறித்த தண்டனை தொடர்பில் வருத்தம் தெரிவித்துள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையமானது, கருத்துரிமைக்கு களங்கம் விளைவிக்காமல் நடக்குமாறு தாய்லாந்து அரசை அறிவுறுத்தியுள்ளது.
தாய்லாந்து அரச குடும்பத்தை விமர்சித்த நபர்: ராணுவ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Reviewed by Author
on
June 09, 2017
Rating:

No comments:
Post a Comment