அண்மைய செய்திகள்

recent
-

தெரேசா மே பதவி விலகுங்கள்: ஜெர்மி கோர்பின் பரபரப்பு பேட்டி...


பிரித்தானியா பொதுத் தேர்தலுக்கான முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

கன்சர்வேட்டிவ் கட்சியை விட எதிர்கட்சியான தொழிலாளர் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி வருகிறது.

தொழிலாளர் கட்சியின் பிரதமர் வேட்பாளரான ஜெர்மி கோர்பின் தான் போட்டியிட்ட Islington North தொகுதியில் அபார வெற்றி பெற்றுள்ளார். 40, 086 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இதன் பின்னர் பேட்டியளித்த ஜெர்மி கோர்பின், தெரேசா மே பதவியை விட்டு விலகுங்கள், இந்த நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு வழிவிடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.


பிரித்தானியா பொதுத் தேர்தல் 2017- நேரடி பதிவுகள்

பிரித்தானிய பொதுத்தேர்தலில் Conservative Party தற்போதைய நிலவரப்படி 190 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

தற்போது வரை பெற்றுள்ள வாக்கு எண்ணிக்கை 8,060,411 ஆகும். Conservative Party 178 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.தற்போதைய நிலவரப்படி Labour Party பெற்றுள்ள வாக்கு எண்ணிக்கை 7,859,260 ஆகும்.

இந்த இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவு வருகிறது.
பிரித்தானிய பொதுத்தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி தோல்வியை சந்திக்கும் என்று வாக்களிப்பு நடந்து முடிந்த பின்னர் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

இந்த கருத்துக்கணிப்பினை நிரூபிக்கும் விதமாக, தற்போது வெளியாகிக்கொண்டிருக்கும் தேர்தல் முடிவுகளின் படி, தொழிலாளர் கட்சியே அதிக வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளது.


தெரேசா மே பதவி விலகுங்கள்: ஜெர்மி கோர்பின் பரபரப்பு பேட்டி... Reviewed by Author on June 09, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.