அண்மைய செய்திகள்

recent
-

வவுனியா காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத் தலைவி விசாரணை....


வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத் தலைவி க. ஜெயவனிதா புலனாய்வுத்துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இவரிடம் புலனாய்வுத்துறையினர் இன்று விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

வவுனியாவில் தாயகத்தில் கடத்தப்பட்டும் கையளிக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடியறியும் சங்கத்தின் ஏற்பாட்டில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 100 நாட்களை கடந்த நிலையில் ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் குறித்த சங்கத்தின் தலைவியின் மகள் ஜனாதிபதியுடன் நிற்பது போன்றதான படம் சர்வதேச ரீதியாகவும் உள்ளூரிலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்று குறித்த சங்கத்தின் தலைவி புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

போராட்டம் இடம்பெற்று வரும் இடத்திற்கு வருகை தந்த இரு புலனாய்வாளர்கள் தொடர்பில் சங்கத் தலைவி மற்றும் அவருடைய கணவரை அழைத்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.


தொடர்ந்தும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதற்கு ஒத்துழைக்குமாறும் கோரியதுடன் போராட்ட தளத்திற்கு அருகில் உள்ள பிரதான தபால் நிலையத்திற்கு வருமாறு அழைத்துள்ளனர்.

எனினும், முதலில் மறுப்பு தெரிவித்த தலைவி க. ஜெயவனிதா பின்னர் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கோடு தனது கணவருடன் தபால் நிலைய வளாகத்திற்கு சென்றுள்ளார்.

இதன்போது, ஜனாதிபதியுடன் மகள் நிற்பது போன்ற புகைப்படம் தொடர்பாகவும் அவர் கற்கும் காலப்பகுதியில் கல்வி சுற்றுலா சென்றமை உட்பட காணாமல் ஆக்கப்பட்ட மகள் தொடர்பான பூரண விபரத்தினை பெற்றுள்ளனர்.

இதேவேளை, அண்மையில் சங்கத்தலைவியின் மகள் விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்டவர் எனவும் அவர் தொடர்பாக சில இணையங்களில் வந்த செய்திகள் தொடர்பாகவும் புலனாய்வுப்பிரிவு விபரங்களை கோரியுள்ளது.

சுமார் 1 மணி நேரம் இடம்பெற்ற விசாரணைகளின் பின்னர் இருவரும் போராட்ட தளத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த நிலையில் 13 தடவையாகவும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சங்கத்தின் தலைவியினை போராட்ட தளத்திற்கு சென்று வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.


வவுனியா காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத் தலைவி விசாரணை.... Reviewed by Author on June 07, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.